தோட்டத்தில் சிக்கிய கர்ப்பிணி உடும்பு.. சிம்புவின் அம்மா செய்த காரியம்.. குவியும் பாராட்டு!

சென்னை: நடிகர் சிம்புவின் அம்மா நெகிழ்ச்சியுடன் செய்த காரியம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், வசனகர்த்தா, பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், பாடகர் மற்றும் விநியோகஸ்தர் என பல முகங்களை கொண்டவர் டி ராஜேந்தர். அரசியலில் ஆக்டிவாக உள்ளார்.

டி ராஜேந்தர் ஒரு தலை ராகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களை இயக்கி நடித்துள்ளார். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் டி ராஜேந்தர். கடைசியாக 2017ஆம் ஆண்டு வெளியான விழித்திரு படத்தில் நடித்திருந்தார் டி ராஜேந்தர்.

டி ராஜேந்தர் - உஷா ராஜேந்தர்

டி ராஜேந்தர் - உஷா ராஜேந்தர்

ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார் டி ராஜேந்தர். சிம்பு நடிப்பில் வெளியான வானம் மற்றும் வாலு ஆகிய படங்களை டிஸ்ட்ரிப்யூட் செய்துள்ளார் டி ராஜேந்தர். டி ராஜேந்தருக்கு உஷா என்ற மனைவியும் சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும் இலக்கியா என்ற மகளும் உள்ளனர்.

முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு

முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு

நடிகர் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவரது நடிப்பில் தற்போது மாநாடு, மகா, பத்து தல, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் தயாராகி வருகின்றனர். வெந்து தணிந்தது காடு படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

உஷா ராஜேந்தர் செய்த காரியம்

உஷா ராஜேந்தர் செய்த காரியம்

இந்நிலையில் சிம்புவின் தாயாரான உஷா ராஜேந்தர் செய்த ஒரு காரியம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது, டி.ராஜேந்தர் மனைவியும், சிலம்பரசன் டி.ஆர் தாயுமான உஷா ராஜேந்தருக்கு சென்னை மதுரவாயல் அருகே டி.ஆர்.கார்டன் என்ற பெயரில் தோட்டம் உள்ளது.

டி ஆர் கார்டன் சுத்தம் செய்யும் பணி

டி ஆர் கார்டன் சுத்தம் செய்யும் பணி

கடந்த சில நாட்களாக டி.ஆர்.கார்டனில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த தோட்டத்தில் ஒரு உடும்பு பதுங்கி இருப்பதை பணியாளர்கள் கண்டனர். இதையடுத்து தயாரிப்பாளர் உஷா ராஜேந்தரிடம் உடும்பு பதுங்கி இருப்பது குறித்து தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த அவர் உடும்பு கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தார்.

கார்டனில் இருந்த கர்ப்பிணி உடும்பு

கார்டனில் இருந்த கர்ப்பிணி உடும்பு

பின்னர் மதுரவாயல் காவல் நிலையத்தை அனுகி தங்கள் தோட்டத்தில் உடும்பு இருக்கும் தகவலை தெரிவித்தார். காவல் துறையினர் வேளச்சேரியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுக்கு விஷயத்தை தெரிவித்தனர். இதையடுத்து சம்ப இடத்துக்கு வந்த வனத்துறை ஊழியர்கள் கர்ப்பிணியாக இருந்த அந்த உடும்பை பாதுகாப்பாக எடுத்து சென்றனர்.

உஷா ராஜேந்தருக்கு குவியும் வாழ்த்து

உஷா ராஜேந்தருக்கு குவியும் வாழ்த்து

தாய்மை குணத்துடன் உடும்பின் நிலை கண்டு உடனே தகவல் தெரிவித்த உஷா ராஜேந்தருக்கு காவல் துறையினரும், வனவிலங்கு அதிகாரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து சிம்புவின் ரசிகர்களும் உஷா ராஜேந்தருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X