தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன அம்மா.. அப்பாதான் ஆலோசகர்.. சிம்பு செம ஹேப்பி அண்ணாச்சி!

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக உஷா ராஜேந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

STR பெற்றோர் ஆவேசம் | சிம்பு திருமணம் எப்போ? | TR & Usha Rajendran Pressmeet

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க 2020-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் சென்னையில் நடந்தது.

3 அணிகள் போட்டி

3 அணிகள் போட்டி

தலைவர் பதவிக்கு என்.முரளி ராமநாராயணன், டி.ராஜேந்தர், பி.எல். தேனப்பன் ஆகியார் தலைமையில் 3 அணிகள் போட்டியிட்டன. இதே போல, பொருளாளர் பதவிக்கு ஜே.எஸ்.கே.சதீஷ் மற்றும் செயலாளர் பதவிக்கு கதிரேசனும் போட்டியிட்டனர்.

டி ராஜேந்தர் தலைமையில்

டி ராஜேந்தர் தலைமையில்


செயற்குழு உறுப்பினர் பதவிக்கு இரண்டு குழுக்களும் போட்டியிட்டன. இதில் என்.முரளி ராமநாராயணன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட்டது.

திடீரென ராஜினாமா

திடீரென ராஜினாமா

அவர் தலைமையிலான சங்கம் விபிஎஃப் கட்டணம், படங்களுக்கு இரட்டை வரி போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. ஆனால் அச்சங்கத்திலிருந்து டி.ராஜேந்தர் தலைவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

தலைவராக உஷா ராஜேந்தர்

தலைவராக உஷா ராஜேந்தர்

இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக டி ராஜேந்தரின் மனைவியும் நடிகர் சிம்புவின் தாயாருமான உஷா ராஜேந்தர், கவுரவ ஆலோசகராக டி.ராஜேந்தரும் சங்க உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X