பத்ம விருதுகள் வழங்கும் விழா.. குடியரசுத் தலைவர் கைகளால் விருதை பெற்றுக்கொண்டார் உஷா உதுப்

சென்னை: மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பத்ம விருதுகள் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அதில் சிரஞ்சீவி, பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன், விஜயகாந்த், பின்னணி பாடகி உஷா உதுப், நடிகர் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டன. இந்தச் சூழலில் பத்ம விருதுகளை உஷா உதுப், சிரஞ்சீவி உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பெற்றுக்கொண்டனர்.

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகள் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. பிரதமரால் வருடந்தோறும் அமைக்கப்படும் இந்தக் குழு, அமைச்சரவை செயலாளரால் வழிநடத்தப்பட்டு உள்துறை செயலாளர், குடியரசுத் தலைவரின் செயலாளர் மற்றும் ஆறு முக்கிய நபர்களை உள்ளடக்கியது. இந்தக் குழுவின் முழுமையான ஆலோசனைக்கு பிறகு குழுவின் பரிந்துரைகள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டு பிறகு விருதுகள் வழங்கப்படும்.

Usha Uthup And Mithun Chakaravarthy Received Padma Bhushan Awards in Rashtrapathy Bhavan

பெருமைமிகு விருதுகள்: இந்த விருதுகள் பெறுவது இந்திய அளவில் பெருமைமிகு ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து ரஜினிகாந்த், கே.பாலசந்தர் உள்ளிட்ட பலர் இந்த பத்ம விருதுகளை பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் 2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியல் சில மாதங்களுக்கு முன்புதான் வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

யார் யாருக்கு விருது: அந்தவகையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதேபோல் பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியத்துக்கும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. மேலும் நடிகரும் தேமுதிகவின் முன்னாள் தலைவருமான விஜயகாந்த், பின்னணி பாடகி உஷா உதுப், நடிகர் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்டோருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்தம் 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விருது வழங்கும் விழா: இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகை ராஷ்டிரபதி பவனில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு விருதுகள் வழங்கி கௌரவித்தார். அதன்படி உஷா உதுப், மிதுன் சக்கரவர்த்தி, பத்மா சுப்ரமணியம் உள்ளிட்டோர் திரௌபதி கைகளால் தங்களுக்கான விருதினை பெற்றுக்கொண்டார்கள்.

ஃபேமஸ் உஷா உதுப்: உஷா உதுப் இந்திய அளவில் பிரபலமான பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழிலும் அவர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் இசையில் பாடியிருக்கிறார். 1960களிலிருந்து தொடர்ந்து பாடிவரும் அவருக்கு இந்திய அளவில் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். அவர் மும்பையை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் தனது இசை பயணத்தை சென்னையிலிருந்துதான் தொடங்கினார் என்பது நினைவுகூரத்தக்கது. பாடகியாக மட்டுமின்றி மன்மதன் அம்பு உள்ளிட்ட சில படங்களிலும் உஷா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X