தலப்பாக்கட்டி ஆன உஸ்தாத் ஹோட்டல்... விக்ரம் பிரபு ஜோடியாக நஸ்ரியா!
மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற உஸ்தாத் ஹோட்டல் படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார்கள்.
இந்தப் படத்துக்கு தலப்பாக்கட்டி என தலைப்பு வைத்துள்ளனர். தலப்பாக்கட்டி என்பது தமிழகத்தில் மிகப் பிரபலமான பிரியாணி ஹோட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் பிரபு - நஸ்ரியா
இந்த படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் அவர் ஒப்புக் கொண்டிருக்கும் புதுப்படம் இது.

ராஜ்கிரண்
மேலும் ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை ‘கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இயக்குகிறார்.

சத்யசிவா
படம் குறித்து சத்யசிவா கூறுகையில், "இப்படத்தில் நடிக்க முதலில் நஸ்ரியாவிடம் கேட்டபோது, ‘உஸ்தாத் ஹோட்டல்' மலையாள படத்தில் நித்யா மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் குறைவு. ஆனால், குறைந்த காட்சிகளே இருந்தாலும் அதில் அவர் சிறப்பாக நடித்திருந்தார். அவரைவிட நன்றாக நம்மால் நடிக்க முடியுமா? என்ற ஐயம் உள்ளது. அதனால் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார்.

கதையில் மாற்றம்
ஆனால், நான் மலையாள படத்தைவிட, தமிழ் படத்தில் நாயகிக்கு கூடுதல் காட்சிகள் வரும்படி கதையில் மாற்றம் செய்துள்ளேன். இதில் நடிப்பை வெளிப்படுத்துவதற்கு நல்ல ஸ்கோப் உள்ளது என்று கூறியதும் அவர் மனம்மாறி நடிக்க ஒப்புக்கொண்டார்," என்றார்.

முஸ்லீம் குடும்ப கதை
இப்படத்தை வருகிற மார்ச் 31-ந் தேதி தொடங்கவுள்ளனர். இது ஒரு முஸ்லீம் குடும்பத்தை பற்றிய கதை. ராஜ்கிரண் இப்படத்தில் முஸ்லீம் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இவர்களுடன் சார்லி, தம்பி ராமையா, சூரி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











