கேட்டவுடன் மனதை கவரும் உசுரே பாடல் லிரிக்கல் வீடியோ இதோ
சென்னை: சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் வரும் உசுரே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
பிச்சைக்காரன் படம் புகழ் சசி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், சித்தார்த், காஷ்மிரா உள்ளிட்டோர் நடித்து வரும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. அபிஷேக் பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் வரும் உசுரே பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று மாலை வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள். அறிவித்தபடியே லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக 2 பாடல்கள் வெளியான நிலையில் இன்று வெளியாகியுள்ள உசுரே பாடல் கேட்பவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் இது தான் என்று ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.
உசுரே பாடல் கேட்டவுடன் மனதில் பதிந்துவிடுகிறது. இளசுகள் கொண்டாட மேலும் ஒரு பாடல் கிடைத்துவிட்டது. உசுரே பாடலை கேட்டவர்கள் அண்ணா செமயா இருக்கு அண்ணா என்று ஜி.வி. பிரகாஷிடம் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
பாடலே இப்படி இருந்தாலும் படம் செமயாக இருக்குமோ என்று தற்போதே பேசத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் தனுஷ் ரசிகர்களோ, ஜி.வி. சார் அப்படியே அந்த அசுரன் அப்டேட் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று கேட்டுள்ளனர்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்து வரும் அசுரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் அவரிடம் தனுஷ் ரசிகர்கள் அடிக்கடி அப்டேட் கேட்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











