twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உத்தம வில்லன்... வெளிநாடுகளில் வசூல் எப்படி?

    By Shankar
    |

    கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படம் வெளிநாடுகளில் நல்ல வசூலுடன் தொடங்கியது.

    லிங்குசாமி தயாரிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், பூஜா குமார், ஆன்ட்ரியா, கே பாலச்சந்தர் நடித்த படம் உத்தம வில்லன்.

    வெளிநாடுகளில் ஏப்ரல் 30-ம் தேதியன்றே வெளியாகிவிட்ட இந்தப் படம் இந்தியாவில் மே 2-ம் தேதிதான் வெளியானது.

    மலேசியாவில்..

    மலேசியாவில்..

    மலேசியாவில் இந்தப் படம் 26 அரங்குகளில் வெளியானது. முதல் மூன்று நாட்களில் இந்தப் படம் ரூ 95.12 லட்சத்தை அங்கு வசூலித்துள்ளது. அங்கு இந்தப் படத்துக்கு பெரும் போட்டியாக இருக்கிறது காஞ்சனா 2.

    அமெரிக்காவில்

    அமெரிக்காவில்

    அமெரிக்காவில் 98 அரங்குகளில் இந்தப் படம் வெளியானது. இதன் தமிழ் வடிவம் மூன்று நாட்களில் ரூ 2.96 கோடியையும், தெலுங்கு வடிவலம் ரூ 26 லட்சத்தையும் வசூலித்துள்ளது.

    ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியாவில் 17 திரையரங்குகளில் வெளியான உத்தம வில்லன் ரூ 69.30 லட்சத்தை வசூலித்துள்ளது. இங்கு இன்னும் காஞ்சனாவும், ஓ காதல் கண்மணியும் ஓடிக் கொண்டுள்ளன.

    கனடா

    கனடா

    கனடாவில் ரூ 30.58 லட்சத்தை உத்தம வில்லன் பெற்றுள்ளது. தமிழ்ப் படங்களின் முக்கிய மார்க்கெட்டான பிரிட்டிஷ் பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

    இந்தியாவில்..

    இந்தியாவில்..

    இந்தியாவில் இந்தப் படத்தின் வசூல் நிலவரம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஒரு நாள் கழித்து வெளியிட்டதால் ரூ 10 கோடி வருவாயை இந்தப் படம் இழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Kamal Haasan starrer "Uttama Villain" aka "Uthama Villain" has opened to a good start at the overseas box office in the first weekend.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X