கமலின் ‘உத்தமவில்லன்’ ரிலீஸ் தேதி மாற்றம்... அக்டோபரில் தான்?

சென்னை: நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிக்கும் உத்தம வில்லன் பட ரிலீஸ் தேதி தள்ளிப் போய் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நடிகர் கமல் விஸ்வரூபம்-2 மற்றும் உத்தமவில்லன் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கேளடி கண்மணி, சதிலீலாவதி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ரமேஷ் அரவிந்த் தான் உத்தமவில்லன் படத்தின் இயக்குநர்.

இப்படத்தில் கமலுக்கு பூஜா குமார், ஆண்டிரியா, பார்வதி என மூன்று நாயகிகள் ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி தயாரிக்கிறார்.

ரிலீஸ்...

ரிலீஸ்...

காமெடியை அடித்தளமாகக் கொண்ட இப்படத்தின் வேலைகள் துரித கதியில் நடந்து வருகின்றன. எனவே, படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் ரிலீசாகும் என தகவல் வெளியானது.

தள்ளிப் போகிறது?

தள்ளிப் போகிறது?

ஆனால், தற்போது சிலபல காரணங்களால் படம் செப்டம்பர் மாதம் ரிலீசாகாது என்றும், ரிலீஸ் தேதி அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சர்ச்சை நாயகன்...

சர்ச்சை நாயகன்...

சமீபகாலமாக தன் படங்கள் மூலம் கமலும் சர்ச்சை நாயகன் ஆகி வருகிறார். அந்தவகையில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் உத்தம வில்லன் பட ‘பர்ஸ்ட் லுக்கே' பரபரப்பைக் கூட்டியது.

காப்பி இல்லை...

காப்பி இல்லை...

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னதாகவே வித்தியாசமாக வெளியான பர்ஸ்ட் லுக்கில் வரும் கமலின் தோற்றம் ஒரு பிரபல புகைப்படத்தின் காப்பி என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதற்கு உரிய விளக்கம் அளித்து விட்டு தன் பட வேலையை மீண்டும் துவக்கினார் கமல்.

காமெடித் திருவிழா...

காமெடித் திருவிழா...

இப்படத்தில் கமலுடன் மலையாள நடிகர் ஜெயராமும் இணைந்து நடிப்பதால், தெனாலி, பஞ்ச தந்திரம் பட வரிசையில் இப்படமும் காமெடியில் களை கட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X