»   »  தீர்ந்தது பிரச்சினை... இன்று பிற்பகல் வெளியானது உத்தம வில்லன்!

தீர்ந்தது பிரச்சினை... இன்று பிற்பகல் வெளியானது உத்தம வில்லன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உத்தம வில்லன் படத்துக்கான சிக்கல்கள் ஒவ்வொன்றாகத் தீர்க்கப்பட்டு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு படம் வெளியானது.

இந்தப் படம் நேற்று வெளியாகவிருந்தது. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக இந்தப் படம் நேற்று வெளியாகவில்லை.


Uthama Villain will hit screens at 2.30 pm

நேற்று காலை முதல் படத்தை வெளியிடுவது குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி, வெளியீட்டாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் விநியோகஸ்தர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.


இன்று காலையிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இந்த நிலையில் அனைத்துப் பிரச்சினைகளும் சுமூகமாக முடிந்ததால் இன்று பிற்பகல் படம் வெளியானது.


சத்யம் உள்ளிட்ட திரையரங்குகளில் படத்துக்கான முன்பதிவு சில நிமிடங்களுக்குள் முடிந்தது. முதல் காட்சி பிற்பகல் 2.55-க்கு தொடங்கியது. சில அரங்குகளில் 2.30 மணிக்கு தொடங்கியது

English summary
Kamal's Uthama Villain will be releasing in Tamil Nadu Today at 2.30 pm.
Please Wait while comments are loading...