twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யாருங்க இந்த உட்கர்ஷ் அம்புட்கர்? ஆஸ்கர் விழாவில் அசத்திய தமிழ் வம்சாவளி நடிகர்

    By
    |

    Recommended Video

    List of all the winners at Oscars 2020 - Video

    லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் அமைதியாக அசத்தியிருக்கிறார், தமிழ் வம்சாவளியை சேர்ந்த ராப் பாடகரும் நடிகருமான உட்கர்ஷ் அம்புட்கர்!

    92 வது ஆஸ்கர் விருது விழா இன்று காலை நடைபெறறது. ஹாலிவுட் சினிமாவின் உயரிய விருது விழாவான இதில், கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

    விழா நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி திரையரங்கம் திரை நட்சத்திரங்களால் நிரம்பி வழிந்தது.

    பாரசைட்-டுக்கு 4 விருது

    பாரசைட்-டுக்கு 4 விருது

    இந்த விழா கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இல்லாமல் நடைபெற்றது. இதில், தென்கொரியாவின் பாரசைட் படத்துக்கு 4 விருதுகள் கிடைத்தன. சிறந்த படம், சிறந்த திரைக்கதை, இயக்குநர், வெளிநாட்டு படம் ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை இந்தப் படம் தட்டிச் சென்றது.

    ஜோக்குயின் பீனிக்ஸ்

    ஜோக்குயின் பீனிக்ஸ்

    சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது 1917 படத்துக்கு கிடைத்தது. சிறந்த நடிகர் விருது ஜோக்கர் படத்தில் நடித்த ஜோக்குயின் பீனிக்ஸுக்கும் சிறந்த நடிகை விருது ஜூடி படத்தில் நடித்த ரினீ ஸெல்வேகருக்கும் கிடைத்தன. பல்வேறு பரிந்துரைகளில் இருந்த ஜோக்கர் படத்துக்கு அதிக விருதுகள் கிடைக்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    இந்திய வம்சாவளி

    இந்திய வம்சாவளி

    சிறந்த இயக்குனருக்கான விருது பெற்ற பாரசைட் இயக்குனர் போங்க் ஜூன் ஹோ ஆசியாவைச் சேந்தவர் என்ற வகையில் பெருமைப் பட்டுக் கொண்டிருந்த நிலையில் இன்னொரு ஆசியரான உட்கர்ஷ் அம்பேத்கரும் இந்த விழாவில் கலக்கி இருக்கிறார். அவர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராப் பாடல்

    ராப் பாடல்

    இந்த விழாவில் அத்தனை திரை நட்சத்திரங்களுக்கு இடையில் அவர் ராப் பாடல் ஒன்றை பாடியுள்ளார். அந்த பாடல் பலத்த வரவேற்பை பெற்றது. அவருக்கு அங்கு குழுமியிருந்த நட்சத்திரங்கள், பலமாக கைத்தட்டி தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இதையடுத்து அவர் யாரென்று ரசிகர்கள் கூகுளில் தேடி வருகின்றனர்.

    யாரிந்த உட்கர்ஷ்?

    யாரிந்த உட்கர்ஷ்?

    உட்கர்ஷின் அப்பா சுரேஷும் அம்மா இந்துவும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி முடித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள பால்டிமோரில் மருத்துவ ஆய்வு பணியில் இருப்பவர்கள். இவர்களின் ஒரே மகன் உட்கர்ஷ் அம்புட்கர். சென்னை மாகாணத்தின் முதல் இந்திய அட்வகேட் ஜெனரலாக இருந்த வெம்பாக்கம் பாஷ்யம் ஐயங்காரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்!

    ஹாலிவுட் சினிமாவில்

    ஹாலிவுட் சினிமாவில்

    பாட்டு, சினிமா என்று வாழ்க்கையை தொடங்கிய உட்கர்ஷ் சில ஹாலிவுட் படங்களிலும் டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். ராக்கெட் சயின்ஸ், பிட்ச் பெர்பக்ட், ரைட் அலாங் 2, பாஸ்மதி புளூஸ், கேம் ஓவர் மேன் உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார் இவர். இந்த வருடமும் இரண்டு படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

    English summary
    Indian-American singer-actor Utkarsh Ambdukar who performed a rap that impressed the audience at the function of Oscar 2020
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X