"உற்றான்" வெற்றி பெற்றான்.. அறிமுக ஹீரோ ரோஷனுக்கு உற்சாக வாழ்த்துகள்.. உற்றான் ஆடியோ ரிலீஸ்

சென்னை: உறவினர்கள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு உற்றானும் முக்கியமாகும் என்று இயக்குநர் பேரரசு கூறியுள்ளார்.

உற்றான் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் படத்தின் நாயகன் ரோஷன், நாயகி ஹிரோஷினி, இயக்குநர் ராஜா கஜினி, தயாரிப்பாளர் ராஜன் உள்ளிட்ட முக்கிய திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

வெயில் பட நாயகி பிரியங்கா நாயர் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் நடிக்கும் திரைப்படம் உற்றான். இது கடந்த 1994ஆம் ஆண்டில் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

 புரட்டிப் போட்ட கதை

புரட்டிப் போட்ட கதை

கல்லூரி மாணவன் ஒருவனின் வாழ்க்கையை சின்னஞ்சிறிய ஸ்க்ரூ ஒன்று எப்படி புரட்டிப் போடுகிறது என்பது தான் உற்றான் திரைப்படத்தின் ஒன்லைன் கதை. இயக்குநர் ஓ.ராஜா கஜினி முற்றிலும் புதுமுயற்சியுடன் உருவாக்கியிருக்கும் உற்றான் திரைப்படத்தில் நாயகியாக ரோஷினி நடிக்கிறார். ரோஷினி ஆந்திராவின் புகழ்பெற்ற மிமிக்ரி கலைஞர்களான கோமலி சகோதரிகளில் ஒருவர். ஒரு நகைச்சுவை கலைஞரை நாயகியாக்கி அழகு பார்த்திருக்கிறார் இயக்குநர் ஓ.ராஜா கஜினி. உற்றான் படத்தில் புதுமுக நாயகனாக ரோஷன் அறிமுகமாகிறார். இவர் மறைந்த தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் ரவீந்திர தாஸின் பேரன் ஆவார்.

 நாயகனுக்கு அட்வான்ஸ்

நாயகனுக்கு அட்வான்ஸ்

உற்றான் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. இதில் படத்தின் நாயகன் ரோஷன், நாயகி ஹிரோஷினி, இயக்குநர் ராஜா கஜினி, தயாரிப்பாளர் ராஜன் உள்ளிட்ட முக்கிய திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதில் பேசிய தயாரிப்பாளர் ராஜன், ஒரு வரியில் உற்றான் வெற்றி பெற்றான் என்று சொன்னதோடு நிச்சயமாக இந்தப்படம் வெற்றியடையும் என்று குறிப்பிட்டார். அதோடு தான் தயாரிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு முன்பணமாக நாயனுக்கு ரூ.5000 கொடுத்தார். மேலும், தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கேரவன்

கேரவன்

இன்றைய நடிகைகள் கேரவன் வேன் கேட்டு குடைச்சல் கொடுப்பதைப் பற்றியும் குறிப்பிட்டு கேரவன்கிறது ஒரு கிரகம் பிடிச்ச வேன் என்று பஞ்ச் டயாலாக் பேசினார் ராஜன். இன்றைய நடிகர் நடிகைகளில் சில பேர் கேரவன் வேன் கேட்டு அடம்பிடிக்கிறார்கள். ஆனால் சின்சியரான நடிகர் நடிகைகள் அப்படி செய்வதில்லை. சூட்டிங் சமயத்தில் சூட்டிங் ஸ்பாட்டிலேயே இருக்கின்றனர். இவ்வளவு ஏன் நடிகர் மம்முட்டி சொந்தமாக கேரவன் வேன் வைத்திருக்கிறார். ஆனால் அவர் சூட்டிங் ஸ்பாட்டில் அதை பயன்படுத்துவதில்லை, என்று குறிப்பிட்டார்.

 ஜாக்குவார் தங்கம்

ஜாக்குவார் தங்கம்

ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, நடிகர் ராதாரவியை தாக்கி பேசினார். தமிழ் படத்தில் நடித்துக்கொண்டு, தெலுங்கு பேசும் மக்களுக்கு ஆதரவாக பேசியதை கண்டித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார்.

 தாத்தா மாதிரி வா

தாத்தா மாதிரி வா

கவிஞர் பிறைசூடன் பேசும்போது, நாயகன் ரோஷனின் தாத்தா ரவீந்திர தாஸும் பத்திரிக்கையாளர் தான், அவருடைய அப்பா சுபாஷும் பத்திரிக்கையாளர் தான், அதனால் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்று சொன்னார். இயக்குநர் பேரரசு பேசும்போது, உறவினர்கள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு உற்றானும் முக்கியமாகும்.என்று குறிப்பிட்டு பேசினார்.

 அது ஏன் ரோஷன் உதயக்குமார்

அது ஏன் ரோஷன் உதயக்குமார்

எங்கள் குடும்ப நண்பர் ரவீந்திர தாஸ். அவர்தான் எனக்கு சின்ன வயதில் இருந்தே குரு. நான் கல்லூரியில் படிக்கும்போதே, அவரது எழுத்துக்களை பார்த்துதான் வளர்ந்தேன்.. பாடல்களை எழுத தொடங்கினேன். ஆனால் அவரது மகன் சுபாஷூக்கு சினிமாவில் நான் குருவாகி போனேன். அதனால்தான் அவருடைய மகனுக்கு என் பெயரை சேர்த்து ரோஷன் உதயகுமார் என்று பெயர் வைத்துள்ளார். அது எனக்கு இன்னமும் பெருமைதான்.

 நடிகர் ராஜேஷ்

நடிகர் ராஜேஷ்

நடிகர் ராஜேஷ் பேசும்போது, நடிகர் ரோஷனின் தாத்தா ரவீந்திர தாஸ் அரசியல், சினிமாவை பற்றி விமர்சனம் எழுதும்போது உண்மையானதை மட்டுமே எழுதுவார். சில சமயங்களில் தலைவர்கள் யார் எவ்வளவு திட்டு விழுந்தாலும், விமர்சனம் செய்வதை நிறுத்தமாட்டார். எதற்காகவும், யாருக்காகவும் தன்னை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவே மாட்டார். பல ஆண்டுகளாக செய்திகளை உண்மையாகவே எழுதியவர், அதை நான் பலமுறை பார்த்து வியந்தவன். அவர் என்னுடைய குடும்ப நண்பர்" என்று குறிப்பிட்டு பேசினார்.

பாக்யராஜ்

பாக்யராஜ்

பத்திரிகையாளர் ரவீந்திரதாஸ் சினிமாவில் சேவை செய்தவர். வியாபார நோக்கம் அவரிடம் துளியும் பார்க்க முடியாது. அவரது எழுத்துக்களை நான் விரும்பி படிப்பேன். என்னால இந்த விழாவுக்கு வர முடியாது என்று நினைத்தேன். ஆனால் சுபாஷூக்காக மட்டுமே என் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு வந்தேன். இந்த படம் வெற்றி பெற வேண்டும். இந்த பட டைரக்டருக்கு என் வாழ்த்துக்கள்.

 இசையமைப்பாளர் தீனா

இசையமைப்பாளர் தீனா

இசையமைப்பாளர் சங்கத் தலைவர் தீனா பேசும்போது, தயாரிப்பாளர்களுக்கும், நடிகர்களுக்கும் எப்படி சொந்தமாக கட்டிடம் உள்ளதோ, அதேமாதிரி இசையமைப்பாளர்களுக்கு என ஒரு கட்டிடம் வேண்டும். இசைஞானி ஒரு கட்டிடம் கட்டித்தர முன்வந்துள்ளதாக பேசினார்.

 உற்றான் ட்ரெயிலர் ரிலீஸ்

உற்றான் ட்ரெயிலர் ரிலீஸ்

இறுதியில் உற்றான் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இயக்குநர் ராஜா கஜினி சொன்னது போல், கல்லூரி மாணவர்களுக்கு இடையில் ஏற்படும் மோதல் காட்சிகள் தான் அதிகம் இடம்பெற்றுள்ளன. அதோடு, லாக்கப் காட்சியில் நாயகன் வெறும் பேண்ட் மட்டுமே அணிந்துள்ளது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆனால் பிரியங்கா நாயர் அரைநிர்வாணமாக நடித்திருப்பதாக குறிப்பிடும் எந்த ஒரு காட்சியும் இடம்பெறவில்லை. பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் இந்த காட்சி பற்றி குறிப்பிட்ட பிரியங்கா தான் அந்த மாதிரியான காட்சியில் நடிக்கவில்லை என்று மறுத்துள்ளார்.

 இளைஞர்களுக்குப் பிடிக்கும்

இளைஞர்களுக்குப் பிடிக்கும்

இளசுகளை சூடேற்றும் ரொமான்ஸ் காட்சிகளும், குத்துப்பாட்டும் இடம்பெற்றுள்ளது. கத்தியால குத்துறதும் அருவாளல வெட்றதும் பழைய ஸ்டைல், நாங்கள்லாம் மண்ண திங்கிறவங்க, மரத்த கொளுத்துறதுக்கு பதிலா மனுஷன போட்டு கொளுத்துவோம், யானையே சிங்கத்தால கொல்ல முடியும் ஆனா ஒரு எறும்பால சாய்க்க முடியுமா போன்ற பஞ்ச் டயலாக்குள் இடம்பெற்றுள்ளன. பில்லா ஜெகனின் பொறி பறக்கும் சண்டைக்காட்சிகள் நிச்சயம் கை தட்டல் பெற வைக்கும்

More from Filmibeat

Read more about: roshan priyanka nair
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X