»   »  சர்வதேச திரைப்பட விழாவில் 6 விருதுகளை அள்ளியது கமல்ஹாசனின் உத்தமவில்லன்

சர்வதேச திரைப்பட விழாவில் 6 விருதுகளை அள்ளியது கமல்ஹாசனின் உத்தமவில்லன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேசத் திரைப்பட விழாக்களில் 6 விருதுகளை வென்று சாதனை படைத்திருக்கிறது கமல் ஹாசன் நடிப்பில் வெளியான உத்தமவில்லன் திரைப்படம்.

கமல் ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, ஊர்வசி மற்றும் நாசர் நடிப்பில் வெளியான திரைப்படம் உத்தமவில்லன். ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்த இப்படத்தை லிங்குசாமியுடன் இணைந்து கமல் தயாரித்து இருந்தார்.


UttamaVillain Bags More than 5 Awards in International Film Festival

ஜிப்ரான் இசையில் கடந்த மே மாதம் வெளியான இப்படத்தில் கமலின் திரையுலக குருவாக விளங்கிய இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் ஒரு முக்கிய வேடமேற்று நடித்திருந்தார்.கமல் படம் முழுவதும் நடிகனாகவே தோன்றிய இப்படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை, இந்நிலையில் இப்படம் தற்போது சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வாரிக் குவித்து வருகிறது.தற்போது இப்படமானது லாஸ் ஏஞ்சல்ஸ் இண்டர்நேஷ்னல் திரைப்பட விழாவில் விருதுகளை வாங்கி குவித்துள்ளது. இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இசை, சிறந்த பாடல், சிறந்த சவுண்ட் டிசைன் என ஐந்து விருதுகளை இப்படம் பெற்றுள்ளது.மேலும் ரஷ்யன் திரைப்பட விழாவிலும் சிறந்த இசைக்கான விருது இப்படத்திற்கு கிடைத்துள்ளது. இதனால் உத்தமவில்லன் படக்குழுவினர் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.


English summary
Kamal Haasan's Uttama Villian Bagged 5 Awards in Los Angles International Film Festival. Music Director Ghibran Tweeted #Uttama Villain Bagged Best Film,Best Actor,Best Music,Best song&Sound design in LA International Film Festival Award".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil