கங்கனா ரனாவத்தின் தேஜஸ்... படத்தை பார்த்து கண்கலங்கிய முதல்வர்.. அப்படி என்ன படத்தில் இருக்கு!
சென்னை: கங்கனா ரனாவத் நடித்த தேஜஸ் படம் பார்த்த உத்திரபிரதேச முதல்வர் யோகி கண்கலங்கினார்.
35 வயதான கங்கனா ரனாவத் திரைத்துறையில் கடந்த 2006ம் ஆண்டு என்ட்ரியானவர். இந்திய திரை நட்சத்திரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பெரும்பாலும் இந்தி மொழி படங்களில் நடித்து வரும், கங்கனா ரனாவத் சிறந்த நடிப்பிற்காக இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
கங்கனா ரனாவத்: தமிழிலும் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ள கங்கனா ரனாவத், அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை சொல்வது இவரது வழக்கமாகும். ட்விட்டர் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை தெரிவித்து வந்த காரணத்தால் கடந்த 2021 ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு பின் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.
சந்திரமுகி 2: அண்மையில் இவர் பி வாசு இயக்கத்தில் உருவாகி சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், லஷ்மி மேனன், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா, மனோ பாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் கங்கனாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். தற்போது இவர், இந்திரா காந்தி வாழ்க்கை வரலாற்று திரைப்படமான எமர்ஜெர்ன்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் நவம்பர் 24ந் தேதி வெளியாக உள்ளது.
மோசமான விமர்சனம்: கங்கனாவின் நடிப்பில் 27ந் தேதி தேஜஸ் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. சர்வேஷ் மேவாரா எழுதி இயக்கி உள்ள இப்படத்தை ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்துள்ளார். இதில் அன்ஷுல் சவுகான் மற்றும் வருண் மித்ரா ஆகியோர் நடித்துள்ளனர். படம் வெளியான இரண்டே நாளில் பாக்ஸ் ஆபிசியில் மோசமான விமர்சனத்தை இப்படம் சந்தித்தது.
கண்கலங்கினார்: இந்நிலையில், உத்திரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் இப்படத்தை பார்த்து விட்டு நெகிழ்ச்சியில் கண்கலங்கினார் என்று கங்கனா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், எங்களுக்கு ஆதரவளிப்பதாகவும், இது பெண்களின் முன்னேற்றத்திற்கான படம் இல்லை. பெண்களின் சக்தியை அனைவரும் தெரிந்து கொள்வதற்கான படம் எனக் கூறியதாக கங்கனா தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











