5 ஆண்டுகளாக அடித்து உதைத்த காதலர்: டிவி நடிகை பகீர் பேட்டி
மும்பை: தோழிகள் முன்பு தன்னை காதலன் தாக்கியதாக தொலைக்காட்சி நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் டீனா தத்தா. உத்தரன் சீரியல் மூலம் ஏகத்திற்கும் பிரபலமானவர். அவர் தனது காதல், கடந்த காலம் பற்றி பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

5 ஆண்டுகள்
நான் சினிமா துறையை சேராத ஒருவரை காதலித்தேன். 5 ஆண்டுகளாக அவரை சின்சியராக காதலித்தேன். நண்பர்கள் மூலம் சந்தித்து காதலர்கள் ஆனோம். ஆனால் அவர் என்னை அடித்து உதைத்து உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் காயப்படுத்தினார்.

நண்பர்கள்
என் நண்பர்கள் முன்பு கூட அவர் என்னை அடித்திருக்கிறார். இருப்பினும் நான் பொறுத்துக் கொண்டேன். ஒரு கட்டத்தில் என் மீதே எனக்கு நம்பிக்கை இல்லாமல் போனது. தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுபவள் நான் அல்ல. ஆனால் இது பேச வேண்டிய நேரம் என்று நினைக்கிறேன். இனியும் அமைதியாக இருக்க முடியாது.

பிரிவு
நம் காதலர் தானே என்று அவர் என்னை எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொண்டேன். ஒரு கட்டத்தில் என்னால் தாங்க முடியவில்லை. அதன் பிறகு அவரை பிரிந்துவிட்டேன். நான் காதலித்து திருமணம் செய்ய விரும்புகிறேன். ஆனால் கடவுள் என் வாழ்க்கையில் காதலை அனுப்பவில்லை. நான் சினிமா துறையை சேர்ந்த யாரையும் திருமணம் செய்ய விரும்பவில்லை.

திருமணம்
சினிமா துறையை சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் உறவு நிலைத்து நிற்காது. அப்படி சினிமா துறையை சேர்ந்தவர்களின் திருமணம் நாசமாக போனதை நான் பார்த்திருக்கிறேன். நான் மிகவும் இளம் வயதிலேயே வெற்றியை பார்த்துவிட்டேன் என்று டீனா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











