விடாமல் ஹிட்டடிக்கும்… உட்றாதீங்க யப்போ பாடல்… கர்ணன் படக்குழு ஹேப்பி!

சென்னை : என்ஜாய் எஞ்சாமி புகழ் தீ குரலில் "உட்றாதீங்க யப்போ' பாடல் வெளியான சில நிமிடங்களில் இருந்தே சோசியல் மீடியாவில் தாறுமாறாக ஹிட்டடித்தது.

இந்த பாடலை தீ மிகவும் உருக்கமாகவும், அதே சமயம் சற்றே டாப் ஸ்டைலில் மாடர்னாவும் பாடியுள்ளார்.

யூட்டியூபில் இந்த பாடல் 4.4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கௌரி கிஷான், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் கர்ணன். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ்நாராயணன் இசையமைத்துள்ளார்.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

ஏப்ரல் 9ந் தேதி வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. திரையரங்குகளுக்கு 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளிலேயே 10 கோடி ரூபாயை வசூல் செய்து தனுஷின் அசுரன் பட வசூலை பின்னுக்கு தள்ளியது.

பாடல்களும் ஹிட்

பாடல்களும் ஹிட்

இப்படம் எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதோ அதே அளவுக்கு இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. இப்படத்தின் முதல் பாடலான கண்டாவரச்சொல்லுங்க, மஞ்சனத்தி, உட்றாதீங்க யப்போ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

4.4 மில்லியன் வீவர்ஸ்

4.4 மில்லியன் வீவர்ஸ்

என்சாய் எஞ்சாமி புகழ் தீ பாடிய உட்றாதீங்க என்ற பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே அனைவரும் விரும்பும் பாடலாக மாறியது. சமூகவலைத்தளத்தில் தாறுமாற வைரலான இப்பாடல் தற்போது யூ-டியூப்பில் 4.4 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X