அமிதாபுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை, ஆனால் படம்..: எஸ்.ஜே. சூர்யா

By Siva

Recommended Video

தயாரிப்பாளருக்கும், அமிதாப் பச்சனுக்கும் இடையே பிரச்சனை.. உயர்ந்த மனிதன் படம் தடை- வீடியோ

சென்னை: உயர்ந்த மனிதன் படத்தின் தயாரிப்பாளருக்கும், அமிதாப் பச்சனுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.

தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வந்த படம் உயர்ந்த மனிதன். இந்த படம் மூலம் அமிதாப் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.

அமிதாபுடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் இருந்தார் சூர்யா. செட்டில் அமிதாபும், சூர்யாவும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

உயர்ந்த மனிதன்

உயர்ந்த மனிதன்

படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் அமிதாபுக்கும், தயாரிப்பு தரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று செய்திகள் வெளியாகின. உயர்ந்த மனிதன் படத்திற்கு அளித்த டேட்ஸில் அவர் வேறு படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார் என்று தகவல் வெளியானது.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

அமிதாப் தற்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த பிரச்சனையால் உயர்ந்த மனிதன் படம் கைவிடப்பட்டது என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து எஸ்.ஜே. சூர்யா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

எஸ்.ஜே. சூர்யா

எஸ்.ஜே. சூர்யா

தயாரிப்பு தரப்புக்கும், அமிதாப் சாருக்கும் இடையே சிறு பிரச்சனை உள்ளது. அதை தீர்த்து வைத்து படப்பிடிப்பை நடத்துவோம். மான்ஸ்டர் படம் ரிலீஸான பிறகு மும்பை சென்று இந்த பிரச்சனை குறித்து பேசி தீர்வு காணப்படும். நானும், இயக்குநர் தமிழ்வாணனும் ஏற்கனவே பல பிரச்சனைகளை தீர்த்து தான் படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.

மான்ஸ்டர்

மான்ஸ்டர்

எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள மான்ஸ்டர் படம் நாளை ரிலீஸாகிறது. தன் படத்திற்கு யு சான்று கிடைத்த ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் உள்ளார் எஸ்.ஜே. சூர்யா. இது குடும்பங்கள் கொண்டாடும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் என்று தெரிவித்துள்ளார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X