அமீர் மக்கள் போராளி தான்.. தயாரிப்பாளர் ஆதம்பாவா பேட்டி!

சென்னை: ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் உயிர் தமிழுக்கு. இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா, யூடியூப் சேனலில் படம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அதில் இயக்குநர் அமீர் 20 ஆண்டுக்கு மேலாக திரைத்துறையில் இருக்கிறார். அன்றில் இருந்து இன்று வரை தமிழகத்தில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதில் முன்நின்றுபோராடினார். பருத்திவீரன் போன்ற ஒரு வெற்றிப்படத்தை கொடுத்த பிறகு தமிழ், தெலுங்கு என முன்னணி ஹீரோக்கள் இவருடன் படம் எடுக்க காத்திருந்தார்கள். இவர் நினைத்து இருந்தால், ஒருபடத்திற்கு இவ்வளவு என பணம் சம்பாதித்து வீடுவாசல் என்று வசதியாக இருந்து இருக்கலாம். ஆனால், அவர் அதை விரும்பவில்லை.

Uyir Thamizhukku movie Producer and director Adham bava bold Speech

இயக்குநர் ஆதம்பாவா: இதனால் தான் இந்த படத்தில் மக்கள் போராளி என்று பட்டம் கொடுத்தேன். அதுமட்டுமில்லாமல் இந்த படம் ஒரு அரசியல் படம் என்பதால், இந்த பட்டம் அவருக்கு சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றியதால் மக்கள் போராளி என வைத்தேன். இனி மேல் தமிழக மக்களுக்கு அமீர் மக்கள் போராளி தான். அவர் என்ன மக்களுக்காக போராடுனார் என்று கேட்பவர்கள் வேண்டுமானால், இணையத்தில் தேடி பார்த்துக்கொள்ளட்டும் அவர் எதற்கு எல்லாம் போராடினார் என்று ஆதம்பாவா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

நாளை ரிலீஸ்: அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். மேலும், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணிய சிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X