டி.ராஜேந்தர்தான் எனது சாமி.. கலங்கிய நளினி.. யப்பா இவ்வளவு மரியாதை வெச்சிருக்காங்களே!
சென்னை: டி.ராஜேந்தர் கோலிவுட்டில் பிரபலமான இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆவார். சினிமாவில் ஒரு துறையில் வெற்றி காண்பதே கஷ்டம். ஆனால் டி.ராஜேந்தரோ நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என அனைத்து துறைகளிலும் புகுந்து விளையாடியவர். இவரது எதுகை மோனை பேச்சு பலரை ரசிக்க வைத்திருக்கிறது. சூழல் இப்படி இருக்க அவர் இயக்கி மெகா ஹிட்டான உயிருள்ளவரை உஷா திரைப்படம் ரீ ரிலீஸாகவிருக்கிறது. அதன் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் நளினி பேசியது அனைவரையும் நெகிழ செய்திருக்கிறது.
சினிமா பின்னணியே இல்லாத குடும்பத்திலிருந்து திரைத்துறைக்கு வந்தவர் டி.ராஜேந்தர். அவர் இயக்கிய முதல் படமான ஒருதலை ராகம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இயக்குநராக மட்டுமின்றி முதல் படத்திலிருந்தே வசனங்கள் எழுதுவாது, கேமரா, இசையமைப்பது என அத்தனை ஏரியாக்களிலும் தன்னை நிலை நிறுத்தியவர் அவர். அவரது படங்கள் மட்டுமின்றி இசையமைத்த பாடல்களும் இன்றுவரை அனைவரது ஃபேவரைட்டாக இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான்கூட ராஜேந்தரிடம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.ராஜேந்தர் செய்த அறிமுகங்கள்: டி.ராஜேந்தர் தன்னை போன்றே தனது மகன் சிம்புவையும் நடிகராக அறிமுகப்படுத்தினார். அவரும் தனது தந்தை போன்று நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது, இசையமைப்பது என பல திறமைகளை கொண்டிருக்கிறார். சிம்பு மட்டுமின்றி நளினி, அமலா உள்ளிட்ட நடிகைகளையும் டி.ராஜேந்தர்தான் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதுகை, மோனையில் கிங்: ஒரு வரி எதுகை மோனையில் பேசுவதற்கோ அல்லது எழுதி வைத்து அப்படி பேசுவதற்கோ பலரும் திணறுவார்கள். ஆனால் டி.ராஜேந்தரோ எந்த மேடையாக இருந்தாலும், எத்தனை மணி நேரமாக இருந்தாலும் எதுகை மோனையில் பேசி அத்தனை பேரையும் ஆச்சரியப்படுத்திவிடுவார். அவர் மீது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையில் இருக்கும் அத்தனை பேருமே பெரிய மரியாதையை வைத்திருக்கிறார்கள்.
உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க அவர் இயக்கத்தில் கடந்த 1983ஆம் ஆண்டு வெளியான படம் உயிருள்ளவரை உஷா. நளினியை வைத்து இயக்கப்பட்டிருந்த அப்படம் மெகா ஹிட் ஆனது. ரிலீஸ் ஆன சமயத்தில் காதலர்களும், குடும்பத்தினரும் மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு சென்று பார்த்த படமாகும். சூழல் இப்படி இருக்க அந்தப் படம் ரீ ரிலீஸாகவிருக்கிறது. அதனையொட்டி ரிலீஸ் ஈவெண்ட் சென்னையில் நேற்று நடைபெற்றது.
எமோஷனல் ஆன நளினி: அந்த விழாவில் பேசிய நடிகை நளினி, "டி.ராஜேந்தர்தான் என்னை செதுக்கினார். அவர்தான் எனது சாமி, தெய்வம் எல்லாமே. அந்தப் படம் நடித்த சமயம் எனக்கு சின்ன வயது. யார் யாரோ என்னை சத்தம் போடுகிறார்கள் என்று கோபித்துக்கொண்டு சென்றுவிடுவேன். அந்த சமயத்தில் யார் யாரோ அவர்கள்து சகோதரிகளை எல்லாம் நடிக்க வைத்தார்கள். ஆனால் டி.ராஜேந்தரோ எனது வீட்டுக்கு வந்து நளினி நடித்தால்தான் இந்தப் படத்தை நான் எடுப்பேன் என்று சொன்னார். யாருமே அப்படி செய்யமாட்டார்கள். அவரால்தான் இன்று நான் உங்கள் முன்பு நிற்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











