விகே ராமசாமி... கதாபாத்திரமாகவே வாழ்ந்த கலைஞன்!

By Shankar

விகே ராமசாமி.... தமிழ் சினிமாவின் உன்னதமான கலைஞர்களில் ஒருவர். காலம் இந்த தமிழ் திரைப்படத் துறைக்குத் தந்த கொடை இந்த மகத்தான கலைஞன் என்றால் மிகையல்ல.

ஏற்காத வேஷமில்லை. பேசாத வசனமில்லை. முதலாளி, தொழிலாளி, அப்பா, தாத்தா, அண்ணன், தம்பி, கணக்கப்பிள்ளை, வேலைக்காரன், கூலிக்காரன், கடத்தல்காரன், காவல்காரன், போலீஸ், இன்ஸ்பெக்டர், அதிகாரி, தொழிலதிபர், டாக்டர், வக்கீல், குமாஸ்தா, ராஜா, மந்திரி, புலவன், சேவகன், தூதுவன், அடப்பக்காரன், நாயகனுக்கு நண்பன், விதூஷகன், நல்லவன், கெட்டவன், பைத்தியம், கோமாளி, இன்னும் என்னென்ன உங்களுக்குத் தோன்றுகிறதோ அத்தனையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்... அப்படி எல்லா விதமான வேஷங்களையும் செய்து முடித்து விட்டவர் அமரர் வி கே ராமசாமி.

V K Ramasamy 14th death anniversary

இந்த பழம் பெரும் திரைப்பட நடிகர் 1940களில் பாய்ஸ் கம்பெனி என்று அறியப்பட்ட நாடக உலகிலிருந்து திரையுலகு வந்தவர்.

1947ஆம் ஆண்டு வெளிவந்த நாம் இருவர் என்ற திரைப்படத்தில் தமது 21ஆம் அகவையில் 60 அகவை கிழவனாராக நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

விகேஆர் என பரவலாக அறியப்பட்டார். புகழடைந்தாலும் முதுமை வேடங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஐம்பது ஆண்டு திரைவாழ்வில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்.

1960களிலும் 1970களிலும் முன்னணியில் இருந்த டி. ஆர். மகாலிங்கம், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், இரவிச்சந்திரன், முத்துராமன், கமலஹாசன், ரஜினிகாந்த் என அத்தனை உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தவர்.

அவருடைய வாக்குநடை, அவரை நகைச்சுவை வேடத்திலோ எதிர்மறை வேடத்திலோ சிறப்பாக நடிக்க வழி செய்தது. நகைச்சுவை நடிகை மனோரமாவுடன் இணைந்து அவர் பணி புரிந்த திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. பின்னாட்களில் 15 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

ஏற்றுக் கொண்ட எந்தக் கதாபாத்திரத்திற்குள்ளும், வேஷத்திற்குள்ளும் சென்று 'பச்'சென்று பசை ஒட்டிய மாதிரி உட்கார்ந்து கொள்ளும் திறமை இவருக்கு உண்டு. இத்தனைக்கும் நாம் அடிக்கடி கேட்டுக் கேட்டு மகிழ்ந்த அதே வெண்கலக் கணீர்க் குரல்தான் எல்லாப் படத்திலும் ஒலிக்கும். ஆனால் பேசும் வசனங்கள் பளீரென்று சுருதி சுத்தமாக டிஜிட்டலைஸ் பண்ணியது போல் கேட்கும். ஏற்ற இறக்கத்தோடு காதுக்கு வந்து சேர்ந்து அதன் பொருளை, அந்தக் கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கும்.

முதல் அறிமுகக் காட்சியிலேயே, கதைக்கு ஏற்றாற்போல், அந்தப் பாத்திரமாகவே ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவர் வருவதுபோல்தான் இருக்கும்.

1926-ல் விருதுநகரில் பிறந்த இந்த பச்சைத் தமிழன், 2002 ல் இதே நாளில்தான் (டிசம்பர் 24) மறைந்தார். விகே ராமசாமி எழுதிய 'எனது கலைப்பயணம்' என்ற புத்தகம் மிகச் சிறந்த சுயசரிதைப் புத்தகமாகப் பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X