வில்லங்கமாகும் பஞ்சாயத்து..நான் குடிகாரனா? கே.ராஜன் மன்னிப்புக் கேட்க வேண்டும்..தயாரிப்பாளர் ஆவேசம்!

By

சென்னை: தன்னைக் குடிகாரன் என்று சொன்ன கே.ராஜன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஒருவர் ஆவேசமடைந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சில திரைப்பட தயாரிப்பாளர்களிடையே நடக்கும் பஞ்சாயத்துக்கள் காரசாரமாகி வருகின்றன.

லாக்டவுன் காரணமாக மற்றத் துறைகளை போல சினிமா துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா தொழிலாளர்களுக்கு பலர் உதவினர்.

 ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களும் பணம் மற்றும் பொருளுதவி செய்தனர். இந்நிலையில் மூத்த தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் ரஜினிகாந்த் நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கும் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ரஜினிகாந்த் மற்ற அமைப்புகளுக்கு நிவாரணப் பொருட்கள் கொடுத்ததை போல, தயாரிப்பாளர்களுக்கும் கொடுத்தார்.

குறிப்பிட்ட தொகை

குறிப்பிட்ட தொகை

இதற்கு தயாரிப்பாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் முதலாளிகளாக இருப்பவர்கள். வெறும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்களை எப்படி வரிசையில் நின்று வாங்க முடியும்? ரஜினி, தயாரிப்பாளர்களுக்கு உதவ வேண்டும் என்றால், குறிப்பிட்ட தொகையை வழங்கி இருக்க வேண்டும் என்றனர்.

 தயாரிப்பாளர் பழனிவேல்

தயாரிப்பாளர் பழனிவேல்

இந்நிலையில், அந்த நிவாரணப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, தயாரிப்பாளர் பழனிவேல் உட்பட சிலர் அங்கு வந்தனர். பழனிவேல், ஓரம்போ, நீ வேணுன்டா செல்லம் உட்பட சில படங்களை தயாரித்தவர். அவர், நிவாரணப் பொருட்களை வழங்கிக்கொண்டிருந்த தயாரிப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தயாரிப்பாளர்கள் அழகன் தமிழ்மணி உட்பட சிலர் அவரை சமாதானப்படுத்தினர்.

 தட்டிக்கேட்டேன்

தட்டிக்கேட்டேன்

சிறிது நேரத்தில் அவர் சென்றுவிட்டார். பின்னர், அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், 'நாம் முதலாளிகள். நாம் அரிசி வாங்கலாமா? என்று கேட்டிருந்தார். இது அப்போது பரபரப்பானது. இந்நிலையில், தயாரிப்பாளர் பழனிவேல் இப்போது புதிய ஆடியோ பதிவு ஒன்றை தயாரிப்பாளர்களின் வாட்ஸப் குரூப்பில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘ரஜினிகாந்த் நிவாரணப் பொருட்கள் கொடுத்ததை அன்று தட்டிக் கேட்டதற்கு என்னை குடிகாரன் என்று சொல்லியிருக்கிறார், கே.ராஜன்.

 மன்னிப்பு கேட்கணும்

மன்னிப்பு கேட்கணும்

தட்டிக்கேட்டதுக்கு, இந்த பட்டம் கொடுத்த அவருக்கு நன்றி. யாரை பார்த்து குடிகாரன்னு சொல்றீங்க? நான் குடிகாரனா? இதுக்கு, உடனே மன்னிப்புக் கேட்கலைன்னா, நீங்க எங்கெங்க குடிச்சு விழுந்து எழுந்தீங்கன்னு தெரியும். அதை எல்லாம் வீடியோவாவே வெளியிடுவேன். என்னை ஒருமையில வேற பேசியிருக்கீங்க.

 வயசுக்கு மரியாதை

வயசுக்கு மரியாதை

நான் என்ன உங்க வீட்டு வேலைக்காரனா? அன்னைக்கு வந்து நான் தட்டிக் கேட்டதுக்கு அவ்வளவு தயாரிப்பாளர்கள் என்னை பாரட்டினாங்க, தெரியுமா? உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து அமைதியாக இருந்தா இப்படியா சொல்வீங்க?' என்று ஆவேசமாகக் கூறியுள்ளார். இதையடுத்து தயாரிப்பாளர்கள் பஞ்சாயத்து பரபரப்பாகி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X