வெற்றிகரமாக மூன்றாவது வாரம்.. ரசிகர்களின் பாராட்டை பெற்ற “வி1“

சென்னை : திரில்லர் படமான வி1 வெற்றிகரமாக மூன்றாவது வாரம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

திரில்லர் படங்களை பெரிதும் விரும்பும் ரசிகர்களுக்கு "வி1" திரைப்படம் ஓரு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. வெளியான நாள் முதல், அப்படத்தை தமிழக ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

படத்தின் கதை கரு என்ன வென்றால் ஒரு பெண் இரவில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறாள். அவள் ஏன் கொல்லப்படுகிறாள் எதற்காக கொல்லப்பட்டாள், அவளை கொலை செய்ய காரணம் என்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடுகிறது இந்த படம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை நம்மை ஒரு வித பதற்றத்திலேயே வைத்து கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர்.

V1 in the third week of success

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர் பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக சிந்தன் இப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

புதிய முயற்சி பாராட்டும்படி இருந்தால் அதற்கான பாராட்டையும் அங்கிகாரத்தையும் என்றும் அளவில்லாமல் அளிப்பதில் முதன்மையானவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். அவர்களின் அன்பால் "வி1" திரைப்படம் தற்போது மூன்றாம் வாரத்தில் முன்னோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றது.

V1 in the third week of success

பல எதிர்பார்ப்புகளோடு இன்று வெளியாகியிருக்கும் சூப்பர் ஸ்டார் நடித்த "தர்பார்" படம் வெளியான் இந்நாளிலும் "வி1" திரைப்படம் இன்னும் சில திரையரங்குகளில் திரையிடப்படுவது பெரும் மகிழ்ச்சி என்கின்றனர் "வி1" படக்குழுவினர். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தங்களது புதிய பட அறிவிப்பை மிக விரைவில் "வி1" படக்குழு தெரிவிக்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X