50 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்தது 'வி1.. படக்குழுவினர் மகிழ்ச்சி !
சென்னை : 'வி1' திரைப்படம் 50 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்துள்ளதால் படக்குழுவினரை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் நடிகர் பாவெல் நவகீதன். ஆரம்பத்தில் சிறு வேடங்களில் நடித்து வந்த பாவெல், மெட்ராஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு நல்ல படங்களில் நல்ல பாத்திரத்தில் நடித்து சிறந்த பண்முக நடிகர் என பெயர் பெற்றார்.

குணச்சித்திர நடிகர்களுக்கு ஓரு கட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு இருந்த காலகட்டத்தில் தனக்கென்று தனி ஸ்டைல், பாடி லாங்க்வேஜ் என தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்த ஆரம்பித்தார். குற்றம் கடிதல் படத்தில் அவர் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அடுத்த கட்டத்துக்கு சென்று தவிர்க்க முடியாது ஒரு நடிகர் என ஆனார்.
தற்போது உள்ள சூழலில் எப்படியாவது சினிமாவிற்கு உள்ளே நுழைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த வேலை கிடைத்தாலும் செய்ய பலர் தயாராக உள்ளனர். அப்படி உள்ளே நுழைந்த பிறகு தங்கள் இலக்கை நோக்கி முன்னேறி செல்கின்றனர்.
அது போலத்தான் பாவெல் அவர்களும் திரைப்பட இயக்குனர் ஆக வேண்டும் என நினைத்து வந்த அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரும் அதை மிக சரியாக பயன்படுத்தி கொண்டு உள்ளார்.
செங்கல்பட்டில் இருந்து படம் இயக்க கிளம்பி வந்த அவர், படங்களில் நடித்து பிரபலமானார். எனினும் தான் வந்தது எதற்கு என்று அவருக்கு மட்டுமே தெரியும். ஒரு கட்டத்தில் தனது திறமையை காட்டி தனக்கு என ஒரு இடத்தை பிடித்து விட்டதும் தன் இலக்கை நோக்கி மீண்டும் பயணப்பட்டு தனக்கு ஒரு தயாரிப்பு நிறுவனம் வாய்ப்பு அளிக்கும் அளவு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.

பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்த பாவெல் தனது முதல் படமான வி1 என்ற படத்தின் மூலம் வெற்றி பெற்று உள்ளார். 50 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்த 'வி1' வெற்றி நடை போடுகிறது. பலரும் இதனால் சந்தோஷம் அடைந்து உள்ளனர் .
கடந்த வருடம் இறுதியில் வெளியாகி அனைவரது பாராட்டையும் பெற்று சிறந்த படமாக அங்கீகரிக்கப்பட்டு நல்ல வசூலையும் ஈட்டிய படம் 'வி1' திரையரங்குகளில் வெற்றிகரமாக 25 நாட்களையும் கடந்து ஒடிய பிறகு வி1 திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிடப்பட்டது.

இவ்வருடம் மார்ச் 24 அன்று அமேசான் ப்ரைமில் வெளியான 'வி1' திரைப்படம் தற்போது 50 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்துள்ளது இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை 'வி1' படக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தங்களது புதிய பட அறிவிப்பை மிக விரைவில் 'வி1' படக்குழு தெரிவிக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications