திரில்லர் மூவி "வி1" வெற்றி.. மகிழ்ச்சியில் படக்குழு
சென்னை : வி1 திரைப்படத்தை வெற்றி படமாக்கிய மக்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் அப்படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
தரமான படங்களாக இருந்தால் தரம் பார்க்காமல் கொண்டாடுவதில் தமிழக ரசிகர்களுக்கு இணை தமிழக ரசிகர்கள் தான். சமீபத்தில் வெளியான பெரும்பாலும் புதுமுகங்கள் ஆட்கொண்ட "வி1" படமே இதற்கு சான்று.

திரில்லர் படத்தில் சமூக விழிப்புணர்வை சேர்த்து விறுவிறுப்பாக உருவான "வி1" திரைப்படம் வெளியான நாள் முதல், அப்படத்தை தமிழக சினிமா ரசிகர்கள் வெகுவாக வரவேற்றனர்.
ஒரு பெண் இரவில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார், எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார் மற்றும் ஏன் அவரை கொலை செய்தனர் , காரணம் என்ன போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடுகிறது இந்த படம். கடைசி வரை நம்மை சீட் எட்ஜ்ல் அமர்த்திய ஒரு திரில்லர் கதை தான் வி1.
படத்தின் விறுவிறுப்பு ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் மிக வேகமாய் இருக்கிறது. முதல் பாதி படு பயங்கரமாக நாம் எதிர்பாராத பல விசயங்களை எடுத்து கொடுத்து படம் நகர்கிறது. இரண்டாம் பாதி முதலில் ஆரம்பம் மெதுவாக இருந்தாலும் படம் போக போக சூடு பிடித்து எதிர்பாரா ஒரு இடத்தில் முடிகிறது.
நாளுக்கு நாள் திரையரங்குகளும், படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போக வெற்றி மகிழ்ச்சியில் உள்ளது "வி1" படக்குழு. இப்படத்தை கொண்டாடிய மக்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் இத்தருணத்தில் தங்களது நன்றியை "வி1" படக்குழு தெரிவித்துள்ளது.
பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர் பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக சிந்தன் இப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











