Don't Miss!
- News
வாட்ஸ்அப்ல கட்டுக்கதைகளை சொல்லுவாங்க.. நம்பாதீங்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விபச்சாரத்தை தமிழ்நாட்டில் சட்டமாக்க வேண்டும்.. V3 பட இயக்குநர் அமுதவாணன் பரபரப்பு பேச்சு!
சென்னை: நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியாகி உள்ள V3 படத்தை இயக்கிய இயக்குநர் அமுதவாணன் தமிழ்நாட்டில் விபச்சாரத்தை சட்டமாக்க வேண்டும் என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யசோதா படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து மிரட்டிய நடிகை வரலக்ஷ்மி இந்த வி3 படத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி எனும் ரோலில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரெட் லைட் ஏரியா இல்லாததால் அதிகமான பாலியல் பலாத்காரங்கள் நடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை இயக்குநர் அமுதவாணன் முன் வைத்துள்ளார்.
ஐ லவ் யூ தலைவா..ரஜினிகாந்துடன் செல்ஃபி எடுத்த வரலக்ஷ்மி சரத்குமார்!

V3 என்றால் என்ன?
வரலக்ஷ்மி சரத்குமார், எஸ்தர் அனில் மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள V3 படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. V3 டைட்டிலுக்கான அர்த்தம் விந்தியா, விக்டிம், வெர்டிக்ட் (Vindhya, Victim, Verdict) என்பது தான். பாலியல் பலாத்காரத்தை மையமாக வைத்துத் தான் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

என்ன கதை
அப்பாவிப் பெண்ணான விந்தியாவை (பாவனா) 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தை விசாரிக்க ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வரலக்ஷ்மியிடம் வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. அந்த குற்றவாளிகளிடம் இருந்து வாக்குமூலம் வாங்குவது தான் படத்தின் கதை. இந்த படம் ஹைதராபாத்தில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதா என்கிற கேள்விக்கு இயக்குநர் அமுதவாணன் இந்தியா முழுவதும் பல இடங்களில் நடைபெற்ற நிஜ சம்பவங்களின் அடிப்படையில் தான் இந்த படத்தை எடுத்துள்ளேன் என்றார்.

விபச்சாரத்தை லீகலைஸ் பண்ணனும்
மும்பை மற்றும் கொல்கத்தாவில் இருப்பது போல அங்கீகரிக்கப்பட்ட ரெட் லைட் ஏரியாக்கள் தமிழ்நாட்டில் இல்லை. மேலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் இல்லை. அதன் காரணமாகத்தான் ஏகப்பட்ட பாலியல் குற்றங்கள் தினம் தோறும் நடக்கின்றன. தமிழ்நாட்டில் விபச்சாரத்தை சட்டப்படி அங்கீகரித்தால் பாலியல் குற்றங்கள் பெருமளவில் குறையும் என இயக்குநர் அமுதவாணன் கூறியுள்ளார்.

டாஸ்மாக் போல
ரெட் லைட் ஏரியா இருக்கும் இடங்களை சுற்றி உள்ள 20 கி.மீ., ரேடியஸ் இடங்களில் பாலியல் குற்றங்கள் ரொம்பவே குறைவாக உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன என்றும் தனது வாதத்தை முன் வைத்த அமுதவாணன் கள்ளச்சாராயம் குடித்து இறப்பதை தடுக்க எப்படி அரசே டாஸ்மாக் எடுத்து நடத்துகிறதோ அதே போல இந்த விஷயத்துக்கும் அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என பேசி உள்ளார்.

தாய்லாந்து போகலையா
இங்கே இருப்பவர்கள் ஏகப்பட்ட பேர் தாய்லாந்து பட்டாயவிற்கு போகலையா என்ன? அங்கே என்னவெல்லாம் நடக்கிறது என்பதை நேரடியாக சென்றே பார்த்துள்ளேன். நம்ம ஊரிலும் பாலியல் கல்வி மற்றும் விபச்சார விடுதிகளுக்கு அங்கீகாரம் வழங்கினால் நிச்சயம் இந்த குற்றம் குறையும் என நம்புவதாக அமுதவாணன் பேசி உள்ளார்.