'தல' பிறந்தநாளில் ரிலீஸாகும் அருண் விஜய்யின் வா டீல்?

By Siva

சென்னை: எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் வா டீல் படம் மே மாதம் 1ம் தேதி ரிலீஸாகும் என்று அருண் விஜய் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வெற்றிக்காக காத்துக் கிடந்த அருண் விஜய் கௌதம் மேனன் அஜீத்தை வைத்து எடுத்த என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். அதற்காக அவர் தனது உடலை கும்மென்று ஆக்கினார். அவர் நினைத்தது போன்றே படம் ஹிட்டானது. மேலும் அவரது நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

ரசிகர்கள் தன்னை ஏற்றுக் கொண்டதை நினைத்து அருண் கண்கலங்கினார்.

வா டீல்

வா டீல்

என்னை அறிந்தால் படத்தை அடுத்து அருண் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் தான் வா டீல். முதலில் டீல் என்று தான் படத்திற்கு பெயர் வைத்தனர். பின்னர் அதை வா டீல் என்று மாற்றிவிட்டனர்.

அருண், கார்த்திகா

அருண், கார்த்திகா

சிவஞானம் இயக்கியுள்ள இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக கார்த்திகா நாயர் நடித்துள்ளார். படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள்

அருண் விஜய் தனது ரசிகர்களை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ரசிகர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டுத் தெரிந்ததில் மகிழ்ச்சி என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தல பிறந்தநாள்

அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் வா டீல் வரும் மே மாதம் 1ம் தேதி ரிலீஸாகும். இசை வெளியீடு ஏப்ரல் 15ம் தேதி நடக்கும் என்று அருண் விஜய் ட்வீட் செய்துள்ளார். மே 1ம் தேதி 'தல' அஜீத்தின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகா

கார்த்திகா

ஒரு வெற்றியாவது கொடுத்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் இருக்கும் கார்த்திகா நாயர் வா டீல் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார். அவர் தற்போது ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாமுடன் சேர்ந்து புறம்போக்கு என்கிற பொது உடமை படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X