twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வா சாமி.. டைட்டிலே சும்மா கூஸ்பம்ப்ஸ் கொடுக்குதே.. நாளைக்கு அண்ணாத்த ஆட்டம் வெறித்தனமா இருக்கும்!

    |

    சென்னை: அண்ணாத்த படத்தின் நான்காவது பாடலான 'வா சாமி' நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

    தீபாவளி ரிலீசாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் அது தொடர்பான அப்டேட்களை அடுத்தடுத்து இறக்கி ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    இதுவரை அண்ணாத்த படத்தின் 3 பாடல்கள் மற்றும் ஒரு டீசர் வெளியான நிலையில், நாளை 4வது பாடல் வெளியாகிறது.

     கை நழுவிப்போய் மீண்டும் வந்த அண்ணாத்த பட வாய்ப்பு... மனம் திறக்கிறார் ஸ்ரீரஞ்சனி கை நழுவிப்போய் மீண்டும் வந்த அண்ணாத்த பட வாய்ப்பு... மனம் திறக்கிறார் ஸ்ரீரஞ்சனி

    தீபாவளி திருவிழா

    தீபாவளி திருவிழா

    சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள அண்ணாத்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. அதிகளவிலான தியேட்டர்கள் அண்ணாத்த படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நல்ல புக்கிங் ஆரம்பித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

    4வது சிங்கிள்

    4வது சிங்கிள்

    இசையமைப்பாளர் இமான் இசையில் இதுவரை அண்ணாத்த படத்தின் 3 பாடல்கள் வெளியாகி உள்ளது. அண்ணாத்த அண்ணாத்த, சார சார காத்து, மருதாணி உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், நாளை மாலை 6 மணிக்கு 4வது சிங்கிள் பாடல் வெளியாக போவதாக சன் பிக்சர்ஸ் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ரஜினி ரசிகர்களை உற்சாகமாக்கி உள்ளது.

    வா சாமி

    வா சாமி

    ரஜினிகாந்த் ரசிகர்களை கூஸ்பம்ஸ் ஆக்கப் போகும் "வா சாமி" எனும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ள அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இப்படியொரு வரிகளில் பாடலா என வியந்து போய் கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

    விபூதி பட்டை

    விபூதி பட்டை

    கருப்பு சட்டை போட்டுக் கொண்டு காலா படத்தில் நடித்த சூப்பர்ஸ்டார் மீண்டும் அண்ணாமலை, அருணாச்சலம் மோடுக்கு மாறியுள்ளார். நெற்றியில் விபூதி பட்டை மற்றும் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டு செம மாஸாக இருக்கும் ரஜினிகாந்தின் அசத்தல் போஸ்டரையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

    ஆர்யா, சூர்யா

    ஆர்யா, சூர்யா

    தீபாவளி ரேஸில் இருந்து சிம்புவின் மாநாடு கடைசி நேரத்தில் பின் வாங்கிய நிலையில், ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் உருவாகி உள்ள எனிமி திரைப்படம் அண்ணாத்த படத்துக்கு போட்டியாக திரையரங்குகளில் வெளியாகிறது. அதே சமயம் சூர்யாவின் ஜெய் பீம் ஒடிடியில் வெளியாகிறது.

    English summary
    Sun Pictures gave a massive Annatthe fourth single update to Rajinikanth fans. Tomorrow Anntthe fourth single Vaa Saamy song will release at 6pm.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X