1 மில்லியன் பார்வையாளர்களை வெறித்தனமாக கடந்த வா சாமி பாடல்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,குஷ்பு, மீனா, சூரி,யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனையை செய்து வரும் நிலையில் இப்போது வா சாமி பாடல் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை வெறித்தனமாக கடந்து வைரலாகிறது.

முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்

முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அவ்வாறு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்கின்ற வகையிலும் அமைந்திருக்கும். தொடர்ந்து அஜித்துடன் கூட்டணி அமைத்து வெற்றி படங்களாக கொடுத்துக் கொண்டிருந்த இயக்குனர் சிறுத்தை சிவா முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து இயக்கிய திரைப்படம் அண்ணாத்த.

தீபாவளி பண்டிகையை குறிவைத்து

தீபாவளி பண்டிகையை குறிவைத்து

அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவான இந்த அதைப் படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். மேலும் குஷ்பு, மீனா,சூரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கொரோனா சூழலுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சற்று தாமதமாகவே தயாராயிருந்தாலும் தீபாவளி பண்டிகையை குறிவைத்து வெளியானது.

குடும்ப ரசிகர்களுக்கு பிடித்திருந்தது

குடும்ப ரசிகர்களுக்கு பிடித்திருந்தது

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் கிராமத்தை கதைக் களத்தில் இப்படத்தில் நடித்து இருந்தார். அதே துடி துடிப்புடன் செம ஸ்டைலாக ஒவ்வொரு காட்சியிலும் அனைவரையும் கவர்ந்து இருப்பார் .சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்து இருக்க டி இமான் இசையமைத்திருந்தார். கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் குடும்ப ரசிகர்களுக்கு திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. தொடர்ந்து வசூல் சாதனையும் செய்து வருகிறது.

Recommended Video

Annathe படத்தை Fans-வுடன் பார்த்த Dhanush | Annathe Audience Opinion
வா சாமி 1 மில்லியன் பார்வையாளர்கள்

வா சாமி 1 மில்லியன் பார்வையாளர்கள்

குறிப்பாக அண்ணன் தங்கை பாசம் இந்த படத்தில் மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது. டி இமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் மிகப் பெரிய வெற்றி பெற்ற சூழலில் இதில் இடம்பெறும் வா சாமி பார்க்கும் அனைவரையும் புல்லரிக்க வைக்கும் கூஸ்பம்ஸ் பாடலாக இருந்தது. வா சாமி வீடியோ பாடல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் வெளியான ஒரே வாரத்தில் வா சாமி பாடல் இப்போது 1 மில்லியன் பார்வையாளர்களை வெரித்தனமாக கடந்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X