Vaa Vaathiyaar Box Office Day 4 - வா வாத்தியார் 4வது நாள் வசூல் சூப்பர்.. பாக்ஸ் ஆஃபிஸில் நிதான முன்னேற்றம்
சென்னை: கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் படம் வா வாத்தியார். இதில் ஹீரோயினாக க்ரித்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இதுதான் அவரது முதல் தமிழ் படம். நலனும், கார்த்தியும் முதன்முறையாக இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நீண்ட காலமாகவே இருந்தது. ஒருவழியாக அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிடு படம் ரிலீஸானது.
தமிழ் சினிமாவில் தற்போதைய தலைமுறை இயக்குநர்களில் சிறப்பானவர், தனித்துவமானவர் என்று பெயர் எடுத்தவர் நலன் குமாரசாமி. அவர் முதலில் இயக்கிய சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு படங்களுமே காலங்கடந்து கொண்டாடப்படுகின்றன. அப்படிப்பட்ட இயக்குநர் கார்த்தியுடன் முதன்முறையாக கூட்டணி வைக்கிறார் என அறிவிப்பு வந்தபோது அனைவருமே மகிழ்ந்தார்கள். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்து முடிந்தது.
தயாரிப்பாளருக்கு பிரச்னை: ஆனால் அந்த நேரத்தில்தான் பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சில பிரச்னைகள் வந்தன. அந்தப் பிரச்னைகள் பொருளாதாரம் சார்ந்தது என்றும் பேச்சுக்கள் கிளம்பின. அதுமட்டுமின்றி கங்குவா படத்தை தயாரித்து கடன்பட்டுவிட்டார் என்றும் குரல்கள் கேட்டன. இப்படி அவரை சுற்றிய பிரச்னைகளால் வா வாத்தியார் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தார். சூர்யாவும் தன்னால் முடிந்த உதவிகளை செய்ததாக தெரிகிறது.

ரிலீஸான வா வாத்தியார்: ஒருவழியாக ஞானவேல் ராஜாவின் பிரச்னைகள் எல்லாம் தீர்ந்துபோக; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வா வாத்தியார் திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வந்தது. ஜனநாயகனின் வெளியேற்றம், பராசக்தி முன்கூட்டியே ரிலீஸ் ஆகியவைகள் எல்லாம் இப்படக்குழுவுக்கு சாதகமாக அமைய தைரியமாக அந்த நாளில் ரிலீஸ் செய்தார்கள். ரசிகர்களும் இந்தக் கூட்டணி என்ன மாதிரியான மேஜிக்கை செய்திருக்கிறது என்பதை பார்க்க ஆர்வத்துடன் தியேட்டர்களுக்கு சென்றார்கள்.
ஏமாற்றமடைந்த ரசிகர்கள்: ஆனால் படத்தில் புதுமையாக எதுவுமே இல்லை என நொந்துகொண்டார்கள். போதாக்குறைக்கு எம்ஜிஆர் மேனரிஸங்களோடு நடிக்கிறேன் என்கிற பெயரில் படம் முழுக்க கார்த்தி இரிட்டேட் செய்துவிட்டார் என கொதித்தார்கள். நலன் குமாரசாமியிடமிருந்து இப்படி ஒரு திராபையான படத்தை எதிர்பார்க்கவில்லை என ஓபனாகவே அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வா வாத்தியார் வசூல்: Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி, ரிலீஸாகி நான்காவது நாளான நேற்று இந்தியாவில் அப்படம் 1.40 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். இதுவரை நான்கு நாட்களில் மொத்தம் 6.90 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாகவும் அந்த தளம் தெரிவித்திருக்கிறது. இப்படத்துக்கு முன்னதாகவே பராசக்தி ரிலீஸானது, இதற்கு பிறகு தலைவர் தம்பி தலைமையில் ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஸ்டாண்டர்டான வசூலை பெற்று பாக்ஸ் ஆஃபிஸில் நிதானமாக வா வாத்தியார் முன்னேறுகிறது என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











