Vaa Vaathiyaar day 7 Box Office - வா வாத்தியார் 7வது நாள் வசூல் இவ்வளவுதானா?.. பாக்ஸ் ஆஃபிஸில் வாஷ் அவுட்
சென்னை: கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அவர் தயாரித்ததாக கூறப்படுகிறது. மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் மோசமான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. இந்நிலையில் வா வாத்தியார் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அடிப்படையில் அவர் உதவி இயக்குநர் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளில் அவரது புத்திசாலித்தனம் நன்றாகவே தெரியும். எனவே அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் மீதும் ரசிகர்களுக்கு இயல்பாகவே எதிர்பார்ப்பு இருக்கும். அப்படிப்பட்ட கார்த்தி; நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் படத்தில் நடிக்கப்போகிறார் என்று அறிவிப்பு வந்ததுமே ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
பொங்கலுக்கு ரிலீஸ்: கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்தார். அவருக்கு இதுதான் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஷூட்டிங் முடிந்து எப்போதோ ரிலீஸாகியிருக்க வேண்டிய படம்; ஞானவேல் ராஜாவுக்கு ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக ரிலீஸாகாமல் முடங்கியிருந்தது. ஒருவழியாக அவருக்கு இருந்த பிரச்னைகள் எல்லாம் தீர்க்கப்பட்டதால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14அம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மோசமான விமர்சனங்கள்: கார்த்தி - நலன் கூட்டணியின் சம்பவத்தை பார்க்கலாம் என்ற ஆசையோடு திரையரங்கில் அமர்ந்த ரசிகர்களுக்கு பெரிய சோதனையாக அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஃபேண்டஸி, சூப்பர் ஹீரோ என பல ஜானர்களை படத்தில் வைத்து எதிலும் தெளிவு இல்லாமல் சொதப்பிவிட்டார் இயக்குநர் என ரொம்பவே நொந்துகொண்டார்கள் ரசிகர்கள். அதிலும், கார்த்தியின் எம்ஜிஆரின் மேனரிஸ நடிப்பையெல்லாம் ஒருகட்டத்துக்கு மேல் பொறுமையாக பார்க்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும்.
நலன் சொன்னதை செஞ்சிட்டாரு: படம் ரிலீஸாவதற்கு சில நாட்களுக்கு முன்பு நலன் கொடுத்திருந்த ஒரு பேட்டியில், இது வழக்கமான என் படம் போல் இருக்காது. அதேசமயம் ரொம்பவே ரசிகர்களை ஏமாற்றிவிட மாட்டேன் என கூறியிருந்தார். படத்தை பார்த்த ரசிகர்கள், நலன் சொன்னதை செஞ்சிட்டாரே ப்பா. எப்படிப்பட்ட இயக்குநர் அவர் என்று வேதனையோடு புலம்புகிறார்கள். இப்படி படத்துக்கு மிக மோசமான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. இதன் காரணமாக படக்குழு கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கின்றது.
வசூல் நிலவரம்: இந்நிலையில் படம் வெளியாகி நேற்றோடு ஒரு வாரம் நிறைவடைந்திருக்கிறத். ஏழாவது நாளில் படம் செய்திருக்கும் வசூல் குறித்தும், ஒரு வாரத்தில் இந்தியாவில் ஆகியிருக்கும் மொத்த வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி 7வது நாளான நேற்று வெறும் 20 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாகவும்; மொத்தம் ஏழு நாட்களில் 8.28 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாகவும் அந்த இணையதளம் கூறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











