“வா வாத்தியார்“ 10 ஜப்பான் படத்திற்கு சமம்.. சூர மொக்கை.. சாக அடிக்காதீங்க.. பொதுமக்கள் கருத்து!
சென்னை: இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் வா வாத்தியார். இப்படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ், க்ரித்தி ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாதன் என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இப்படம் இன்று தியேட்டரில் வெளியாகி உள்ளது. இப்படம் எப்படி இருக்கிறது என் எனது பிலிமி பீட் நடத்திய விமர்சனம்.
வா வாத்தியார் திரைப்படம் பார்த்த ரசிகர் ஒருவர் படம் சூர மொக்கை திரைப்படமாக இருக்கிறது. 10 ஜப்பான் படத்திற்கு சமம் என்று சொல்லும் அவ்வளவு படம் செம மொக்கை, சத்தியமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. தயவுசெய்து ஜனநாயகன் படத்தை வெளியிடுங்கள் எங்களை இப்படி சாக அடிக்காதீர்கள். அரசு கொடுத்த மூணாயிரம் ரூபாய் பணத்தில் இன்னும் எத்தனை மொக்க படத்தை நாங்கள் பார்ப்பது. ஒரே ஒரு நல்ல திரைப்படத்தை வெளியிடுங்க, விஜய்யின் கடைசி படத்தை நாங்கள் ஜாலியாக கொண்டாடிவிட்டு செல்கிறோம்.

படம் சூர மொக்கை: இது போன்ற மொக்கையான படத்தை வெளியிட்டு எங்களை சாக அடிக்காதீர்கள். படத்தில் எம்ஜிஆர் எதற்கு வருகிறார், எதற்கு போகிறார் என்றே தெரியவில்லை. கார்த்தி கஷ்டப்பட்டு எம்ஜிஆராக நடித்து இருக்கிறார். ஆனால், அது ஒர்க் அவுட் ஆகவில்லை, படம் மெக்கை கிரிஞ்சாக இருக்கிறது. கார்த்தி சார் எம்ஜிஆராக நடித்திருக்கிறார் அது மட்டும் தான் பிளஸாக இருக்கிறது. பொங்கல் வெளியான பராசக்தி திரைப்படமும், வா வாத்தியார் திரைப்படமும் ஒர்த் இல்லாத படம். எங்களுக்கு ஜனநாயகன் படம் வந்தால் மட்டும் தான் பொங்கல், தயவுசெய்து ஜனநாயகம் படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்றார்.
படமா இது: படம் பார்த்த மற்றொரு ரசிகர், இந்த படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன். விபத்து நடந்து மருத்துவமனைகள் படுத்து இருப்பவருக்கு கூட வலி, தெரியாமல் இருப்பதற்காக ஊசியை போடுவார்கள். ஆனால், இந்த படத்தை பார்த்து விட்டு இரண்டு மணி நேரம் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். இந்த வேதனை எனக்கு தேவைதான். என் செருப்பை எடுத்து நானே அடித்துக் கொள்ள வேண்டும். நலன் குமாரசாமி சார் மக்கள் நலனை கருத்தில் வைத்து படத்தை எடுங்க என்று சொன்னால், நீங்கள் எந்த மாதிரியான படத்தை எடுத்து வைத்திருக்கிறீர்கள். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகி விட முடியுமா? எம்ஜிஆர் போல நடித்தவர்கள் எல்லாம் எம் ஜி ஆராகி விடுவார்களா? நடிகர் கார்த்தியை எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் அவரை எம்ஜிஆர் ஆக நடிக்க வைத்து எங்களை ஏன் பாடாய் படுத்துகிறீர்கள் என்றார்.
எம்.ஜிஆர் சாகவில்லை: படம் பார்த்த நடிகர் ஜி.எம்.சுந்தர் படம் நன்றாக இருக்கிறது. குறிப்பாக எம்ஜிஆர் வரும் காட்சிகளில் ரசிக்கும்படி இருக்கிறது. எம்ஜிஆரை பற்றி பல விஷயங்கள் இந்த படத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஓவராக படம் நன்றாக வந்து நன்றாக இருக்கிறது என்றார். படம் பார்த்தால் மற்றொரு எம்ஜிஆர் ரசிகர், இந்த படத்தை அனைவருமே பார்த்தாக வேண்டும். எம்ஜிஆர் சாகவில்லை வாழ்கிறார் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு உதாரணம். படம் சூப்பராக இருக்கிறது. அனைவருமே படத்தில் நன்றாக நடித்து இருக்கிறார்கள். பல நாட்களுக்கு பிறகு திரையில் எம்ஜிஆரை பார்த்தது மகிழ்ச்சியாக இருக்கு. நலன் குமாரசாமி நன்றாக இயக்கி இருக்கிறார். கார்த்தியின் நடிப்பும், ராஜ்கிரணின் நடிப்பும் சூப்பராக நடித்திருக்கிறார். அனைவரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படமி நிச்சம் குடும்பத்தோடு அனைவரும் பாருங்கள்.


Click it and Unblock the Notifications











