Vaa Vaathiyaar Box Office Day 3 - வா வாத்தியார் 3வது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸில் நின்னு விளையாடுதே பாஸ்

சென்னை: கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் வா வாத்தியார் திரைப்படம் பல சிக்கல்களை கடந்து கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நலனின் இயக்கம் என்பதால் படத்துக்கு நீண்ட காலமாகவே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இந்நிலையில் படம் வெளியாகி மூன்று நாட்களில் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்தியும், நலன் குமாரசாமியும் சில வருடங்களுக்கு முன்பே கூட்டணி வைத்து வா வாத்தியார் படத்தில் இணைந்தார்கள். இந்தப் படத்துக்கு முன்னதாக நலன் இயக்கியிருந்த சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு படங்களுமே தரமான சம்பவங்களை செய்திருந்தன. அனைவரது ஃபேவரைட் லிஸ்ட்டிலும் அந்த இரண்டு படங்களும் தவறாமல் இடம்பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட இயக்குநருடன் கார்த்தி சேர்ந்ததால் இயல்பாகவே ஹைப் எகிறியது.

படம் சந்தித்த பிரச்னைகள்: ஏராளமான நட்சத்திரங்கள் இதில் நடித்தார்கள். படத்தின் அத்தனை வேலைகளும் முடிந்துவிட்டாலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் மட்டும் முடிந்தபாடில்லை. எனவே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பது; அதன் பிறகு அதிலிருந்து பின் வாங்குவது என ரசிகர்களுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தது படக்குழு. ஒருவழியாக பிரச்னைகள் தீர்க்கப்பட்டு ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

Vaa Vaathiyar Day 3 Box Office is 1 2 Crores in India Karthi Film Earns 5 2 Crore in 3 Days
Photo Credit:

சுமாரான வரவேற்பு: அறிவித்தபடியே போகி பண்டிகையை முன்னிட்டு வெளியான படத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் சென்று பார்த்தார்கள். வழக்கமான ஜானரில் இல்லாம; சூப்பர் ஹீரோ ஜானரில் இந்தப் படத்தை இயக்கியிருந்தார் நலன். ரசிகர் ஒருவருக்குள் எம்ஜிஆரின் ஆன்மா புகுந்து நல்லது செய்யும் என்பதுதான் ஒன்லைன். ஒன்லைன் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தாலும்; திரைக்கதை உள்ளிட்ட விஷயங்களில் நலன் சொதப்பிவிட்டார் என்றே ரசிகர்கள் பலரும் சொன்னார்கள்.

கார்த்தியின் நடிப்பு: படத்துக்கு கொஞ்சம் ஆறுதல் என்றால் அது கார்த்தியின் நடிப்புதான். எம்ஜிஆரின் மேனரிஸங்களை அவர் படத்தில் செய்யும் கொஞ்ச நேரம் மட்டுமே ரசிக்க முடிந்தது. அதுவும் போகப்போக ஓவர் டோஸாகி பார்ப்பவர்களை எரிச்சலடைய செய்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இப்படி படத்தில் ஏகப்பட்ட மைனஸ்கள் இடம்பெற்றுவிட்டதால்; மெகா ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் சுமார் ஹிட்டே ஆகியிருக்கிறது. நலனின் ரசிகர்களும் ரொம்பவே டல்லாகிவிட்டார்கள்.

படத்தின் வசூல் தகவல்: விமர்சனங்கள் அப்படி இப்படி வந்தாலும் வா வாத்தியார் படத்தின் வசூல் ஸ்டாண்டர்டாக சென்றுகொண்டிருக்கிறது. Sacnilk இணையதள தரவுகள்படி முதல் நாளில் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாயை இந்தியாவில் வசூலித்த அப்படம் இரண்டாவது நாளில் 2.35 கோடி ரூபாய் வசூலித்தது. இந்நிலையில் மூன்றாவது நாளான நேற்று படமானது 1.2 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இது கம்மியான வசூல்தான் என்றாலும் போட்டிக்கு பராசக்தி, தலைவர் தம்பி தலைமையில் இருக்கும்போது இந்த வசூல் டீசன்ட்டான ஒன்றுதான் என திரைத்துறையினர் கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X