Vaa Vaathiyaar Day 6 Box Office - வா வாத்தியார் 6வது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸில் மொத்தமாய் படுத்த படம்

சென்னை: கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் வா வாத்தியார் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு பொங்க்ல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. முதன்முறையாக அவர் இரண்டு பேரும் இணைந்திருந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்துக்கு நிலவியது. ஆனால் ரசிகர்களுக்கு முழு திருப்தியும் கிடைக்கவில்லை. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படம் பயங்கரமாக அடி வாங்கிவிட்டது.

தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவர் நலன் குமாரசாமி. அவர் இயக்கிய சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு படங்களுக்கும் எப்போதுமே வரவேற்பு இருப்பதால்; அவர் முதன்முறையாக கார்த்தியுடன் வா வாத்தியார் படத்தில் இணைகிறார் என அறிவிப்பு வெளியானபோது உள்ளபடியே அனைவருமே மகிழ்ச்சியடைந்தார்கள். ஏனெனில் திறமையான இயக்குநர்களோடு கார்த்தி சேரும்போது அந்தப் படம் காலங்கடந்து நிற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலீஸான வா வாத்தியார்: ஆனால் இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்ததிலிருந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிரச்னை மேல் பிரச்னை வந்தது. இதன் காரணமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தத்தளித்தார். ஏகப்பட்ட முறை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பிறகு பின் வாங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை உண்மையிலேயே பிரச்னைகள் எல்லாம் முடிந்ததால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸானது.

Vaa Vaathiyar Day 6 Box Office Karthi Nalan Kumarasamy Movie Collects only 26 Lakhs in india
Photo Credit:

ஏமாற்றிய படம்: நலன் - கார்த்தி கூட்டணியை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலோடு தியேட்டர்களுக்கு சென்றார்கள். பராசக்தி படமும் சுமாராக இருந்ததால் வா வாத்தியாரை பார்க்கவும் முடிவு செய்தார்கள். ஆனால் இயக்குநரோ மொத்தமாக செய்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். எம்ஜிஆரின் ஆன்மா ஹீரோவுக்குள் புகுந்து தீய விஷயங்களை தடுப்பதுதான் என்ற ஒன்லைனை; எவ்வளவு மோசமாக கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுத்துவிட்டார் என ரசிகர்கள் புலம்பினார்கள்.

கார்த்தி வேறு: போதாக்குறைக்கு எம்ஜிஆர் மேனரிஸத்தில் நடிக்கிறேன் என்கிற பெயரில் கார்த்தியும் இந்தப் படத்தில் எல்லை மீறிவிட்டார். சுத்தமாக அவருக்கு செட்டே ஆகவில்லை. மேஜிக் நிகழ்த்தும் என்று நினைத்த கூட்டணி இப்படி மன உளைச்சலை கொடுத்துவிட்டதே என்று ஓபனாகவே அடித்துவிட்டார்கள். படத்துக்கு விமர்சன ரீதியாக எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை என்பதே உண்மை. இந்நிலையில் வசூலில் படத்தின் நிலைமை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

வா வாத்தியார் வசூல்: Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி படம் ரிலீஸாகி ஆறாவது நாளான நேற்று இந்தியாவில் வெறும் 26 லட்சம் மட்டுமே வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை ஆறு நாட்களில் மொத்தம் 7.96 கோடி ருபாயைத்தான் வசூலித்திருப்பதாகவும் அந்த தளம் கூறுகிற்து. போகிற போக்கை பார்த்தால் பத்து கோடி ரூபாயை வசூலில் நெருங்கவே வா வாத்தியார் படாத பாடு படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X