வாடிவாசல்.. டைட்டிலே தெறிக்குதே.. சூர்யா – வெற்றிமாறன் காம்போ.. சந்தோஷத்தில் சூர்யா ரசிகர்கள்!

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்திற்கு வாடிவாசல் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த விருது விழா நிகழ்ச்சியில் இயக்குநர் வெற்றிமாறன் இந்த மாஸ் அப்டேட்டை கொடுத்து சூர்யா ரசிகர்களை வெறியேற்றியுள்ளார்.

சூரரைப் போற்று டீசரை பார்த்து சந்தோஷத்தில் இருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த ஹேப்பி நியூஸாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

டபுள் கியாரன்டி

வெற்றிமாறன் இயக்கும் படம் என்றாலே ரசிகர்கள் ஃபுல் கியாரன்டியுடன் படத்தை பார்க்கலாம். சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்திற்கு ‘வாடிவாசல்' என்ற படு மாஸான டைட்டிலே கதை சொல்வதால் டபுள் கியாரன்டியுடன் படம் மிகப்பெரிய அளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேவல் சண்டை

சேவல் சண்டை

ஆடுகளம் படத்தில் சேவல் சண்டையை வைத்தே அந்த அளவுக்கு தெறிக்கவிட்ட வெற்றிமாறன் தற்போது ‘வாடிவாசல்' என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டு கதையை மையப்படுத்தி படம் எடுத்தால் அதன் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சூர்யா

சூப்பர் சூர்யா

தொடர் தோல்விகளுக்கு பிறகு மறுபடியும் நான் வந்துட்டேன்னு சொல்லு என்ற ரேஞ்சுக்கு அடுத்தடுத்து சூப்பர் அப்டேட்டுகளாக கொடுத்து தனது ரசிகர்களை மறுபடியும் உற்சாகப்படுத்தியுள்ளார் சூர்யா. சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கப் போகிறார் என்ற அப்டேட்டே ரசிகர்களுக்கு வேற லெவல் எனர்ஜியை கொடுத்தது.

கம்பீரம்

கம்பீரம்

வேல், சிங்கம் என கிராமத்து கதைகளில் ஏற்கனவே கம்பீரமாக நடித்து சூர்யா அசத்தியுள்ளார். இதனால், கிராமத்து சப்ஜெக்டில் ஜல்லிக்கட்டு காளை அடக்கும் காட்சிகள், அதன் பின்னால் இருக்கும் அரசியல் என பல விஷயங்களை வெற்றிமாறன் இயக்க சூர்யா சரியான தேர்வாக இருப்பார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுவும் நாவல் தான்

வெக்கை நாவலை மையப்படுத்தி அசுரன் எனும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த வெற்றிமாறன் அடுத்து சூர்யாவை வைத்து இயக்கப் போகும் படமும் ‘வாடிவாசல்' என்ற பிரபல நாவலை மையப்படுத்தித் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ட்விட்டர் டிரெண்டிங்

ட்விட்டர் டிரெண்டிங்

சூர்யா - வெற்றிமாறன் படத்தின் பெயர் ‘வாடிவாசல்' என்ற அப்டேட் கிடைத்துள்ள நிலையில், சூர்யா ரசிகர்கள் #VaadiVaasal என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் தலைப்பு

காப்பான், சூரரைப் போற்று என தொடர்ந்து தமிழில் தலைப்பு வைத்து வரும் நடிகர் சூர்யாவின் அடுத்த பட தலைப்பும் வாடிவாசல் எனும் தமிழ் தலைப்பு தான் என சூர்யா ரசிகர்கள் கெத்து காட்டி வருகின்றனர். வெற்றிமாறன் இயக்கும் அத்தனை படங்களின் தலைப்பும் தமிழ் தலைப்புத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X