Vaadivaasal: வாடிவாசலில் இணையும் வடசென்னை கூட்டணி... சூர்யாவை விட அமீர் கேரக்டருக்கு செம்ம ஹைப்!

சென்னை: வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டை பின்னணியாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் சூர்யாவுடன் அமீரும் நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்னும் சில பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாடிவாசலில் இணையும் வடசென்னை கூட்டணி: சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் சூர்யா 43 படத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக வாடிவாசல் ஷூட்டிங் தாமதமானதால் தான் சுதா கொங்கரா கூட்டணியில் இணைந்தார் சூர்யா. அதன்படி கலைப்புலி எஸ் தாணு தாயரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருந்தது வாடிவாசல்.

 Vaadivaasal: Andrea will play an important role in Vetrimaarans Vaadivaasal

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. இதனால் தான் வாடிவாசல் ஷூட்டிங் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்தப் படத்தில் இயக்குநர் அமீர் முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக வெற்றிமாறன் அறிவித்தார். பருத்திவீரன் பஞ்சாயத்து விஸ்வரூபம் எடுத்த நிலையில், அமீருடன் சூர்யா இணைந்து நடிக்க மாட்டார் எனவும், எனவே வாடிவாசல் ட்ராப் ஆகிவிடும் என்றும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அதெல்லாம் வெறும் வதந்தி எனவும், அமீருடன் இணைந்து நடிக்க சூர்யா ஓகே சொல்லிவிட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் வாடிவாசல் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் அசுர வேகத்தில் நடந்து வருகின்றன. இந்நிலையில், விடுதலை 2 ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதனால் மார்ச் அல்லது ஏப்ரலில் வாடிவாசல் படப்பிடிப்பை தொடங்க வெற்றிமாறன் பிளான் செய்துள்ளாராம்.

 Vaadivaasal: Andrea will play an important role in Vetrimaarans Vaadivaasal

வாடிவாசல் படத்தில் அமீர் கேரக்டர் ரொம்பவே பவர்ஃபுல்லாக இருக்கும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இப்போதைக்கு சூர்யா, அமீர் கேரக்டர் மட்டுமே கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியாவும் முக்கியமான கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். வடசென்னை படத்தில் ராஜன், சந்திரா கேரக்டர்களில் அமீரும் ஆண்ட்ரியாவும் வைப் கொடுத்திருந்தனர். இக்கூட்டணியை அப்படியே வாடிவாசல் படத்திலும் வெற்றிமாறன் கொண்டு வந்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், வாடிவாசலில் ஸ்டண்ட் மாஸ்டராக பீட்டர் ஹெய்ன் கமிட்டாகியுள்ளாராம். படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை பின்னணியாக வைத்து உருவாகினாலும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது என சொல்லப்படுகிறது. அதனால் வெற்றிமாறனின் ஃபேவரைட் ஆக்‌ஷன் கோரியோகிராபியான பீட்டர் ஹெய்ன் வாடிவாசல் படத்தில் இணைந்துள்ளதும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X