Vaadivaasal: ‘சிங்கம்’ ஹீரோ சூர்யா இப்படி பண்ணலாமா..? வாடிவாசல் படத்தை கலாய்க்கும் ப்ளு சட்டை மாறன்
சென்னை: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் லண்டனில் நடைபெற்று வருவதாக சமீபத்தில் வெற்றிமாறன் கூறியிருந்தார்.
இதனை சுட்டிக் காட்டி நடிகர் சூர்யாவை கலாய்த்து ட்வீட் செய்துள்ளார் ப்ளு சட்டை மாறன்.

சூர்யாவை கலாய்த்த ப்ளு சட்டை மாறன்:சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரும் என தெரிகிறது. அதேபோல், கங்குவா டீசர் உள்ளிட்ட சில அப்டேட்களையும் படக்குழுவினர் வெளியிட உள்ளனர். இந்நிலையில், சூர்யாவின் வாடிவாசல் படம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் பேசியிருந்தார்.
தற்போது விடுதலை 2ம் பாகத்தில் சில காட்சிகளை ரீ-ஷூட் செய்துவருகிறார் வெற்றிமாறன். இதனால், வாடிவாசல் ஷூட்டிங் தள்ளிப் போகலாம் அல்லது இந்தப் படமே ட்ராப் ஆகலாம் என சொல்லப்பட்டது. ஆனால், வாடிவாசல் படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக வெற்றிமாறன் அப்டேட் கொடுத்தார். அதற்கான வேலைகள் லண்டனில் நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தார்.

அதாவது, சூர்யா வளர்த்து வரும் காளையை அப்படியே கிராபிக்ஸில் உருவாக்கி வருகிறார்களாம். அனிமேட்ரானிக்ஸ் எனப்படும் டெக்னாலஜி மூலம் உருவாக்கப்படும் இந்த காளையுடன் தான் சூர்யா நடிக்கவிருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருந்தார். ரியலான காளையை போன்றே இது இருக்கும் என சொல்லப்படுகிறது. வாடிவாசல் படம் ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகவுள்ளதால், சூர்யா காளையை அடக்கும் காட்சிகள் இடம்பெறவுள்ளன.
அதனால், உண்மையான காளைக்கு பதிலாக அனிமேட்ரானிக்ஸ் முறையில் உருவாக்கி வருகிறார் வெற்றிமாறன். ஏற்கனவே வாடிவாசல் ப்ரோமோ வீடியோ ஷூட்டிங் நடந்தபோது சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வாடிவாசல் காளை குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பேசியதை ப்ளு சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

இதுகுறித்து ட்விட் செய்துள்ள ப்ளு சட்டை மாறன், "சிங்கம் பட ஹீரோ சூர்யா.. வாடிவாசல் படத்தில் Animatronics (Robot) காளையை அடக்கும் காட்சிகளில் நடிக்கவிருப்பதாக தகவல்" என கலாய்த்துள்ளார். இந்த டிவிட்டர் பதிவு ட்ரெண்டாகி வரும் நிலையில், சூர்யா ரசிகர்கள் ப்ளு சட்டை மாறனை பங்கம் செய்து வருகின்றனர். "ஆண்டி இந்தியன் படத்துல உண்மையாவே செத்தியா ப்ரோ நீ.." என கேட்டு கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











