VaadiVaasal: வெற்றிமாறனால் சூர்யா எடுத்த அதிரடி முடிவு... வாடிவாசலில் என்ட்ரியாகும் தனுஷ்!!

சென்னை: வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட திரைப்படம் வாடிவாசல். கடந்தாண்டே தொடங்கியிருக்க வேண்டிய இந்தப் படம் விடுதலை 2ம் பாகம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இப்போதும் வாடிவாசல் ஷூட்டிங் எப்போது என தெரியாத நிலையில், திடீரென இந்தப் படத்தில் சூர்யா விலகிவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சூர்யாவுக்குப் பதிலாக தனுஷ்..?
சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்தப் படம் சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான ஐகானாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. ஆனால் வெற்றிமாறன் இன்னும் விடுதலை 2ம் பாகத்தில் இருந்து வெளியே வரவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

 VaadiVaasal: Dhanush Ready to do Vaadivaasal Instead of Suriya

சூரி, விஜய் சேதுபதி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் விடுதலை 2 இந்தாண்டு வெளியாகிறது. வெற்றிமாறனுக்காக காத்திருந்த சூர்யா விடுதலை 2 முடியவில்லை என்பதால் சுதா கொங்கராவுடன் இணைந்தார். அதன்படி தற்போது சூர்யா 43 ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனிடையே வாடிவாசலில் இன்னொரு பஞ்சாயத்தும் விஸ்வரூபம் எடுத்தது.

அதாவது வாடிவாசல் படத்தில் இயக்குநர் அமீரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவிருப்பதாக வெற்றிமாறன் அறிவித்தார். அதேநேரம் பருத்திவீரன் பட சர்ச்சையில் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையேயான மோதலும் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் அமீருடன் சூர்யா இணைந்து நடிக்க மாட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. யார் நடித்தாலும் இல்லையென்றாலும் அமீர் வாடிவாசலில் கண்டிப்பாக இருப்பார் என வெற்றிமாறனும் ஒரே போடாக போட்டுவிட்டார்.

இந்த சர்ச்சைகளையெல்லாம் கடந்தும் வாடிவாசலில் சூர்யா நடிக்க முடிவெடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. ஆனால் இப்போது விஜய்யின் கடைசிப் படமான தளபதி 69 இயக்குநர் ரேஸில் வெற்றிமாறனின் பெயர் தான் டாப்பில் உள்ளது. இதனால் விஜய்யின் தளபதி 69 படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தால், வாடிவாசல் படப்பிடிப்பு இப்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

இதனையடுத்து கால்ஷீட் பிரச்சினை காரணமாக வாடிவாசலில் இருந்து சூர்யா விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம் சூர்யாவுக்குப் பதிலாக தனுஷ் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும் இதற்கு ஓகே சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இதுபற்றி உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X