“வாடிவாசல்“ சும்மா மெர்சலா இருக்கும்… ஜீவி சொன்ன சூப்பர் அப்டேட் !
சென்னை : நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இணைந்துள்ள வாடிவாசல் திரைப்படம் பற்றி முக்கியமான தகவலை ஜீவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு கதைக்களத்தைக் கொண்ட வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார்
வாடிவாசல் திரைப்படத்தில் டைட்டில் லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாள் அன்று வெளியானது. நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நின்ற அந்த போஸ்டரை ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடினர்.

எதற்கும் துணிந்தவன்
ஜெய்பீம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சூர்யாவின் ரசிகர்களுக்கு அவரின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் மாதம் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

வரவேற்பை பெற்ற டிரைலர்
இப்படத்தின் டிரைலர் விழா, சென்னையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. டிரைலர் ரசிகர்கள மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உட்பட ஏராளமானோர் படத்தில் நடித்துள்ளனர்

வாடிவாசல்
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை அடுத்து, சூர்யாவின் வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனாவால் நிறுத்தப்பட்டதை அடுத்து, வெற்றிமாறன் சூரியை ஹீரோவாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். சூரியின் படமும் ஏறக்குறைய முடிந்துவிட்டதால். வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.'
Recommended Video

தரமான பாடல்
இந்நிலையில் வாடிவாசல் திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் ஜிவி பிரகாஷ் ட்விட்டரில் ரசிகர்கள் எழுப்பி பல கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அதில் ஒரு ரசிகர் வாடிவாசல் படத்தின் பாடல்கள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த ஜீவி, இப்போது வாடிவாசல் திரைப்படத்திற்கு இசை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல் படத்திற்காக இரண்டு மூன்று பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டு விட்டது. மேலும், ஒரு ராவான ஃபோக் சாங் ஒன்று படத்தில் இருக்கு அந்த பாடல் சும்மா மெர்சலா இருக்கும் என்று ஜிவி பிரகாஷ் கூறினார்.


Click it and Unblock the Notifications











