வெற்றிமாறன் - சூர்யா இணையும் வாடிவாசல்.. பக்கா ஸ்கெட்ச் போட்டிருக்கும் தயாரிப்பாளர்.. ரசிகர்கள் ஹேப்பி
சென்னை: வெற்றிமாறனும், சூர்யாவும் வாடிவாசல் படத்தில் இணைவார்கள் என்று சில வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கு பிறகு வெற்றியோ விடுதலை படத்தின் இரண்டு பாகங்களை இயக்க சென்றுவிட்டார். சூர்யாவோ கங்குவாவில் நடிக்க சென்றுவிட்டார். ரெட்ரோவில் நடித்து முடித்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துவருகிறார். இதனால் வாடிவாசல் ட்ராப்பாகிவிட்டதோ என்று ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பது சமீபத்தில் உறுதியானது.
சூர்யா கடைசியாக கங்குவா படத்தில் நடித்தார். சிறுத்தை சிவா இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அந்தப் படத்துக்கு எதிராக வேண்டுமென்றே சிலர் வேலை செய்தார்கள் என்று சூர்யா தரப்பிலிருந்து சிலர் கூறினாலும்; படத்தில் பெரிதாக ஒன்றுமே இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. படம் தோல்வி என்பதை மட்டும் தாண்டி கடுமையான ட்ரோலுக்கும் உள்ளானது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படங்கள்: கங்குவா தோல்வியால் சூர்யாவும், அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட அப்செட்டில் இருக்கிறார்கள். சூர்யா ஹிட் கொடுத்து சில வருடங்கள் ஆகிவிட்டன. எனவே இனி வரும் படங்களாவது சொதப்பாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அடுத்ததாக அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். டீசரை பார்க்கையில் படம் தப்பித்துவிடும் என்றுதான் அவரது ரசிகர்களுக்கு தோன்றுகிறது. அதேபோல் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார் சூர்யா.
வாடிவாசல்: இதற்கிடையே சூர்யாவின் ரசிகர்களுடைய கவனமும், கண்களும் வாடிவாசல் படத்தின் மீதுதான் அதிகம் இருக்கிறது. ஏனெனில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் அந்தப் படத்தை இயக்குகிறார். சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் சூர்யாவின் கரியரிலேயே தி பெஸ்ட் படமாக அமையும் என்று ஃபேன்ஸ் இப்போதே ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
ட்ராப்பா?: படத்தின் அறிவிப்பு வெளியானவுடன் டெஸ்ட் ஷூட் ஒன்று செய்யப்பட்டது. அதுதொடர்பான வீடியோ பயங்கரமாக ட்ரெண்டானது. ஆனால் அதற்கு பிறகு படத்தின் மூவ்மெண்ட் குறித்து எதுவும் தெரியவில்லை. படம் ட்ராப்பாகிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது. ஆனால் விடுதலை படத்தின் பணிகள் நீண்ட காலம் இழுத்ததால்தான் வாடிவாசல் பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்பட்டது. மேலும் சிஜி பணிகளும் லண்டனில் மும்முரமாக நடைபெற்றுவந்தன.
எப்போது ரிலீஸ்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் வெற்றிமாறன், கலைப்புலி தாணு, சூர்யா ஆகியோர் சந்தித்து பேசினார். அதற்கு வாடிவாசல் படம் தொடங்கப்படுவதாக தாணு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கை ஏப்ரல் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும்; மும்முரமாக ஷூட்டிங்கை முடித்து அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் பிளான் போட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











