Vaadivaasal: விடுதலை 2 பிஸியிலும் வாடிவாசல் அப்டேட்... அடிக்கடி லண்டன் பறக்கும் வெற்றிமாறன்!

சென்னை: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால், வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படப்பிடிப்பில் இருப்பதால், வாடிவாசல் ஷூட்டிங் தாமதமாக தொடங்கும் என தெரிகிறது.

இந்நிலையில், விடுதலை 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் வெற்றிமாறன், இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இன்னொரு பக்கம் ரசிகர்களுக்காக வாடிவாசல் படத்தின் ஸ்பெஷல் அப்டேட் கொடுக்கவும் ரெடியாகி வருகிறாராம்.

 Vaadivaasal: Suriyas Vaadivaasal Pre Production Works On Full Swing

வாடிவாசல் அப்டேட் கொடுக்க ரெடியான வெற்றிமாறன்: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் கேரியரிலேயே மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் படமாக கங்குவா இருக்கும் என சொல்லப்படுகிறது. சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் டீசரும் வெளியாகியிருந்தது. இந்தப் படத்துக்குப் பின்னர் வெற்றிமாறனுடன் இணையவிருந்தார் சூர்யா.

அதன்படி சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு வாடிவாசல் என டைட்டில் வைக்கப்பட்டது. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக கமிட்டானார். சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை பின்னணியாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக வெற்றிமாறனும் அறிவித்திருந்தார். ஜல்லிக்கட்டுப் பின்னணியில் வாடிவாசல் உருவாக இருந்ததும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் 2023 இறுதியில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால், வெற்றிமாறன் தற்போது விடுதலை 2ம் பாகத்தில் சில காட்சிகளை ரீ-ஷூட் செய்துவருகிறார். இதனால், வாடிவாசல் ஷூட்டிங் தள்ளிப் போகலாம் அல்லது இந்தப் படமே ட்ராப் ஆகலாம் என சொல்லப்பட்டது. ஆனால், வாடிவாசல் படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் தொடங்கிவிட்டதாக வெற்றிமாறனும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும் கூறியிருந்தனர்.

சூர்யா வளர்த்து வரும் காளையை அப்படியே கிராபிக்ஸில் உருவாக்கி வருகிறார்களாம். அனிமேட்ரானிக்ஸ் எனப்படும் டெக்னாலஜி மூலம் உருவாக்கப்படும் இந்த காளையுடன் சூர்யா நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகள் லண்டனில் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். அதுமட்டும் இல்லாமல் விடுதலை 2 ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் வாடிவாசல் கிராபிக்ஸ் வேலைகளும் வேகமாக நடக்கிறதாம்.

இதற்காக இயக்குநர் வெற்றிமாறன் மாதம் ஒருமுறை லண்டன் சென்று வருவதாக சொல்லப்படுகிறது. வாடிவாசல் ஸ்க்ரிப்ட் வேலைகளை தொடர்ந்து, ப்ரீ-புரொடக்‌ஷனும் முடியும் தருவாயில் உள்ளதாம். இதனால் விடுதலை 2 படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்தடுத்து வாடிவாசல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இன்று வெற்றிமாறன் பிறந்தநாள் என்பதால், வாடிவாசல் படத்தின் ஸ்பெஷல் அப்டேட் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X