வணங்கானை போல வாடிவாசலும் போச்சா? சூர்யா ஒரு பக்கம்.. வெற்றிமாறன் ஒரு பக்கம்.. என்ன நடக்குது?
சென்னை: கடந்த 2020ம் ஆண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் நடிகர் சூர்யாவின் வாடிவாசல் படம் ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகின. முதன்முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதந்தனர்.
ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக வாடிவாசல் படத்தை இன்னும் இருவரும் இணைந்து ஆரம்பிக்கவே இல்லை. சூர்யா ஒரு பக்கம் அடுத்தடுத்த படங்களில் பிசியாகி வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறனும் விடுதலை 2 மற்றும் ஜூனியர் என்டிஆர் படம் என இன்னொரு திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு நானே வருவேன் நஷ்டத்தில் இருந்து மீள வாடிவாசல் கை கொடுக்கும் என எதிர்பார்த்தால், அந்த படம் கைவிடும் நிலைக்கே சென்று விடும் என அதிர்ச்சிகரமான தகவல்கள் கசிந்துள்ளன.
டிராப்பான வணங்கான்: வாடிவாசல் படத்தை ஆரம்பிப்பதற்கு பதிலாக பாலாவுடன் சேர்ந்து வணங்கான் படத்தை முடித்து விட்டு வருகிறேன் என வெற்றிமாறனிடம் சூர்யா சொல்லிவிட்டு சென்ற வணங்கான் படம் பாதியிலேயே டிராப் ஆனது.
சூர்யா அந்த படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், அருண் விஜய்யை வைத்து அந்த படத்தை இயக்குநர் பாலா இயக்கி வருகிறார். இந்நிலையில், வாடிவாசல் படம் ஆரம்பமாகும் முன்னரே வணங்கான் நிலைமை வந்து விடுமா? என கேள்விகள் எழுந்துள்ளன.
3 வருடங்கள் ஓடிவிட்டது: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படம் தமிழ் சினிமாவையே புரட்டிப் போடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்னமும் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கவே இல்லை.
டெஸ்ட் ஷூட் ஒன்று நடத்தப்பட்டது, மாடுகளுடன் சூர்யா பயிற்சி செய்து வருகிறார் என சில அப்டேட்கள் வெளியானாலும் படப்பிடிப்பை ஆரம்பிக்காமல் அப்படியே அடுத்தடுத்த படங்களில் நடிகர் சூர்யா ஒருபுறமும் இயக்குநர் வெற்றிமாறன் ஒருபுறமும் பிசியாகி உள்ளனர்.
வாடிவாசலை மறந்த சூர்யா: நடிகர் சூர்யா வணங்கான் படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், சிறுத்தை சிவாவுடன் இணைந்து கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக சுதா கொங்கரா உடன் ஒரு படம், பாலிவுட் இயக்குநருடன் ஒரு படம் என சூர்யா செம பிசியாகி உள்ளார். இந்நிலையில், இப்போதைக்கு அவர் வாடிவாசல் பக்கம் வரவே மாட்டார் என்று கூறுகின்றனர்.

ஜூனி யர் என்டிஆர் கொடுத்த அழுத்தம்: விடுதலை படத்தின் 2ம் பாகத்தை மீண்டும் ஷூட் செய்து ரிலீஸ் செய்யும் வேலைகளில் வெற்றிமாறன் ஈடுபட்டு வருகிறார். விடுதலை 2வை முடித்த உடன் வாடிவாசல் பக்கம் வருவார் என எதிர்பார்த்த நிலையில், அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்க வேண்டும் என்கிற அழுத்தம் வெற்றிமாறனுக்கு கொடுக்கப்பட்டு வருகிறதாம்.
இதன் காரணமாகத்தான் வாடிவாசல் படம் இப்போதைக்கு ஆரம்பம் ஆகாது என்றும் வணங்கான் படத்தை போலவே இந்த படமும் டிராப் ஆகவும் வாய்ப்புகள் இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் கோடம்பாக்கத்தை ஷாக் ஆக்கி உள்ளன. தயாரிப்பாளர் தாணு வாடிவாசல் படத்தை ஆரம்பிக்க சூர்யா தரப்பிலும், வெற்றிமாறன் தரப்பிலும் பேசியும் எந்தவொரு பலனும் இல்லாததால் அவரே அப்செட் ஆகி விட்டார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











