வாடிவாசல் அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்.. சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை: வாடிவாசல் எனும் நாவலை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கவுள்ள படம் தான் வாடிவாசல்.

இந்த படத்தில் நாயகனாக நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இந்த படத்தை S. தாணு தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். வாடிவாசல் குறித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

படப்பிடிப்பில் சூர்யா

படப்பிடிப்பில் சூர்யா

சமீபத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நடிகர் சூர்யா உடல் நலம் குணம் அடைந்தவுடன் #Suriya40 படக்குழுவில் இணைந்தார். பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இந்த படத்தில் நடிக்கிறார்.

ரசிகர்கள் ஆரவாரம்

ரசிகர்கள் ஆரவாரம்

#Suriya40 படத்திலிருந்து சூர்யா துப்பாக்கி மற்றும் வாள் உடன் உள்ள புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த இரண்டு புகைப்படங்களையும் இணையத்தில் வைரல் ஆக்கி சூர்யா ரசிகர்கள் ஆரவாரம் செய்து சிறப்பித்தனர்.

படப்பிடிப்பில் வெற்றிமாறன்

படப்பிடிப்பில் வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்த படத்தின் பெயர் "விடுதலை" என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை முடித்தவுடன் வெற்றிமாறன் சூர்யாவுடன் இணையவுள்ளார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்நிலையில் வாடிவாசல் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், வாடிவாசல் படத்திற்கான இசை பணிகளை தொடங்கியுள்ளதாக ட்வீட் பதிவிட்டுள்ளார். இந்த அப்டேட்டால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதற்கு முன் சூர்யாவிற்காக சூரரை போற்று படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசைத்த இசை பெரிய ஹிட் அடித்த நிலையில், வாடிவாசல் Theme மீது எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X