சென்னையில் ஜல்லிக்கட்டு செட்.. பரிவட்டம் கட்டி பட்டையை கிளப்பிய சூர்யா.. வாடிவாசல் ஆரம்பமா?

சென்னை: இயக்குநர் பாலா படத்தை முடித்த பிறகு தான் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படம் தொடங்கும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சென்னையில் ஜல்லிக்கட்டு செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடத்தி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

Recommended Video

Sunny Leone செய்யும் உதவி குவியும் பாராட்டு | அமைதியா உதவும் Suriya

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்கப் போகிறார் என அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் கடந்து விட்டன.

அசுரன் படத்திற்கு பிறகு விடுதலை படத்தின் படப்பில் பிசியாக இருந்த வெற்றிமாறன் தற்போது திடீரென வாடிவாசல் படத்தில் ஆர்வம் செலுத்தியுள்ளது ஏன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

சூர்யாவின் வாடிவாசல்

சூர்யாவின் வாடிவாசல்

தனுஷ் உடன் இணைந்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். அதன் பிறகு சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

பைக்கை வைத்து பொல்லாதவன், சேவலை வைத்து ஆடுகளம் படத்தை இயக்கிய வெற்றிமாறன் தற்போது ஜல்லிக்கட்டு கதையை கையில் எடுத்திருக்கிறார். அசுரன் படத்தை போலவே இந்த படமும் நாவலை தழுவியே படமாக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாடிவாசல் எனும் நாவல் தலைப்பையே படத்திற்கும் வெற்றிமாறன் சூட்டியிருக்கிறார்.

பாலா படத்துக்கு பிறகு

பாலா படத்துக்கு பிறகு

எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்தவுடன் வெற்றிமாறன் உடன் இணைந்து வாடிவாசல் படத்தை சூர்யா பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு இடையே இயக்குநர் பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. 2டி நிறுவன தயாரிப்பில் உருவாகும் அந்த படத்திற்கு சுதா கொங்கரா கிரியேட்டிவ் புரொட்யூசராக பணியாற்ற உள்ளார் என்றும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

சென்னையில் ஜல்லிக்கட்டு

சென்னையில் ஜல்லிக்கட்டு

இந்நிலையில், இன்று திடீரென சென்னை ECRல் ஜல்லிக்கட்டு செட் போடப்பட்டு வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூர்யா உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

டெஸ்ட் ஷூட்

டெஸ்ட் ஷூட்

ஆனால், இது வாடிவாசல் படத்திற்கான டெஸ்ட் ஷூட் மட்டும் தான் என்றும் பாலா படத்தை முடித்த பின்னர் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. டெஸ்ட் ஷூட்டை இவ்வளவு பிரம்மாண்டமாக இயக்குநர் வெற்றிமாறன் தொடங்கி இருப்பதை பார்த்து கோலிவுட் திரையுலகம் பிரமிப்பில் ஆழ்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X