வாகு மசானுக்கு மீண்டும் வாய்ப்பு...அழகு தமிழில் வாழ்த்திய வைரமுத்து

சென்னை : கவிஞர் வைரமுத்துவின் பிரம்மாண்ட முயற்சியாக நாட்டுபடு தேறல் உருவாகி வருகிறது. இதில் இசையமைப்பாளர் வாகு மசானுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்து, அழகு தமிழில் வாழ்த்தி உள்ளார் வைரமுத்து.

100 இசையமைப்பாளர்கள், 100 இயக்குனர்கள், 100 பாடகர்களுடன் வைரமுத்துவின் 100 பாடல்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் துவங்கி வாரத்திற்கு ஒரு பாடல் வீதம் நாட்படு தேறல் பாடல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

வாகு மசானுக்கு மீண்டும் வாய்ப்பு

வாகு மசானுக்கு மீண்டும் வாய்ப்பு

இந்த பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டு வருகிறார். நாட்படு தேறலில் ஏற்கனவே ஒரு பாடலுக்கு வாகு மசான் இசையமைத்துள்ளார். தற்போது மற்றொரு பாடலுக்கு இசை அமைக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வைரமுத்து தனது ட்விட்டர் பதில்,

வைரமுத்து தனது ட்விட்டர் பதில்,

நாட்படு தேறலில்

காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில்
இன்னொரு பாட்டுக்கு
இசையமைத்திருக்கிறார்
வாகு மசான்

கிடார்
தமிழோடு பாடியிருக்கிறது

வாத்தியங்கள்
வார்த்தைகளுக்கு
உரையெழுதியிருக்கின்றன

வரட்டும் பாட்டு
வளர்பிறை ஆவார்
வாகு மசான்(வலது)

உடன்
வளரும் இசைக்கலைஞர்
வைஷ்ணவி கண்ணன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரவேற்கும் ரசிகர்கள்

வரவேற்கும் ரசிகர்கள்

போட்டோவுடன் வைரமுத்து வெளியிட்டுள்ள இந்த பதிவிற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பெண் கலைஞர்களையும் சமமாக கருதி வாய்ப்பு கொடுக்கும் தங்களை பெண் சமூகம் என்றும் போற்றும். தலைமுறை தாண்டி ஓங்கி ஒலிக்கும் கவிப்பேரரசின் தீந்தமிழ் நாட்படுத்தேறலில் தனித்த அடையாளம், வளரும் பெண்சக்திகள் வாழ்க வாழ்த்துகள்.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்


எதிர்பார்ப்பு எகிறுகிறது, புதிய அத்தியாயம் எழுத இருக்கும் நாட்படு தேறல் விரைந்து வரட்டும். "வாத்தியங்கள் வார்த்தைகளுக்கு உரையெழுதியிருக்கின்றன".அழகு. அதேபோன்று கவியின் வார்த்தைகள் வாத்தியங்களுக்குள் ஒலியாகி உயிரூட்டுகின்றன.நாக்கு செவந்தவரே பாடலைப் போல இன்னும் ஓர் அழகான படைப்பிற்கு காத்திருக்கிறோம் ஐயா என பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X