சன் டிவியில் வாலி.. டிவிட்டரை தெறிக்கவிடும் அஜித் ஃபேன்ஸ்! ட்ரென்டாகும் #Vaali
சென்னை: சன் டிவியில் வாலி திரைப்படம் ஒளிபரப்பாவதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் டிவிட்டரை தெறிக்க விட்டு வருகின்றனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் டிவி சீரியல்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சினிமாத்துறைக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது. தினப் பணியை நம்பியுள்ள சினிமாத் தொழிலாளர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

19ஆம் தேதியுடன் நிறுத்தம்
படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களும் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பு கடந்த 19ஆம் தேதியுடன் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் அதுவரை இருந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு ஓரளவுக்கு மேனேஜ் செய்யப்பட்டு வந்தது.

சன் டிவியில் வாலி
தற்போது அதுவும் தீர்ந்து போனதால் சில தொடர்கள் மீண்டும் ஆரம்பம் முதல் ஒளிபரப்பி வருகின்றன. சில சீரியல்களுக்கு பதில் தொலைக்காட்சி சேனல்கள் காலை, மதியம், மாலை என படங்களை ஒளிபரப்பி வருகின்றன. அந்த வகையில் சன் டிவியில் இன்று காலை 9.30 மணி முதல் வாலி படம் ஒளிபரப்பப்பட்டது.
டிவிட்டர் ட்ரென்டிங்
இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் #Vaali என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். சென்னை ட்ரென்ட்டிங்கில் வாலி ஹேஷ்டேக் டாப் 3யில் உள்ளது. அஜித்தின் ரசிகரான இந்த நெட்டிசன் அவரது போட்டோவை ஷேர் செய்து அவர் உருவம் பாரு எளிமை அந்த எளிமை தானே அவருக்கு வலிமை என பதிவிட்டுள்ளார்.
உழைக்க வந்தவர்
பிழைக்க வந்தவர் மத்தியில் உழைக்க வந்தவர் #தல என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன். அஜித்தின் ரசிகரான இவர் வாழ்ந்தா இந்த மனுஷன போல நாலு பேருக்கு முன் உதாரணமா வாழ்ந்துட்டு போகனும் ..#தலஅஜித் என பதிவிட்டுள்ளார்.
எதிலும் வெற்றி
எங்கும் துணிவு எதிலும் வெற்றி திரையிலும் சரி.. தரையிலும் சரி.. எத்திசைக்கும் ஒலிக்கும் ஒர் பெயர் #தல_அஜித் என்று பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர். அதோடு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











