வாலு பட பாடல்கள் இரவோடு இரவாக இன்டர்நெட்டில் லீக்: செய்தது யாரோ?
சென்னை: சிம்பு, ஹன்சிகா நடிக்கும் வாலு படத்தின் பாடல்கள் நேற்று இரவோடு இரவாக இணையதளத்தில் கசிந்துள்ளது.
முன்னாள் காதலர்களான சிம்புவும், ஹன்சிகாவும் நடித்துள்ள வாலு படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். வரும் வாரத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக வாலு படத்தின் 5 பாடல்களும் இணையதளத்தில் கசிந்துள்ளது. பாடல்களின் தரம் நன்றாக இருப்பதால் படக்குழுவைச் சேர்ந்த யாரோ இந்த வேலையை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடித்த பிரியாணி படத்தின் பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே இணையதளத்தில் கசிந்தது.
ஹன்சிகாவின் பட பாடல்கள் அடுத்தடுத்து கசிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications
