மீண்டும் தள்ளிப் போனது சிம்புவின் வாலு
சிம்பு - ஹன்சிகா நடித்த வாலு படத்தின் வெளியீட்டுத் தேதி மீண்டும் தள்ளிப் போய்விட்டது. இதனை படத்தின் தயாரிப்பாளரே உறுதிப் படத்தியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படம் இந்த வாலு. இதோ அதோ என இழுத்தடித்துக் கொண்டிருந்தது. ஒரு வழியாக படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியிட்டிருந்தனர்.
ஆனால் இப்போது படம் மீண்டும் தள்ளிப் போய்விட்டது. வரும் பிப்ரவரி 3-ம் தேதி சிம்பு பிறந்த நாளையொட்டி இந்தப் படத்தை வெளியிடப் போவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
சிம்பு நடித்த மூன்று படங்கள் வெளிவராமல் உள்ளன. வாலு தவிர, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு படங்கள் எப்போது வெளியாகும் என்றே தெரியாத நிலை உள்ளது.
விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












