சிம்பு-ஹன்சிகாவின் ‘வாலு’ டிசம்பர் 24ல் ரிலீஸ்!

By Mayura Akilan

நீண்ட நாட்களாக இழுபறியில் இருக்கும் சிம்புவின் வாலு திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு-ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் வாலு திரைப்படம் 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2013ம் ஆண்டு பொங்கலுக்கு திரையில் ரிலீஸ் ஆகும் என்று தான் ஆரம்பித்தனர்.ஆனால் படம் அறிவித்தபடி வெளியாகவில்லை.

சிம்பு - ஹன்சிகா

சிம்பு - ஹன்சிகா

இந்த படம் தொடங்கப்பட்ட நேரத்தில் சிம்பு-ஹன்சிகா இடையே காதல் என கிசுகிசு வெளியானது. நிதிப் பிரச்னை, சிம்பு-ஹன்சிகா காதல் முறிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் படம் வெளியாகுமா? வெளியாகாதா என்று கூட பேசப்பட்டது.

டிசம்பர் 24

டிசம்பர் 24

எனினும் இயக்குனரின் முயற்சியால் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வழியாக முடிக்கப்பட்டது. எனினும் படம் வெளியாவதற்குரிய எந்த அறிகுறியும் தென்படவில்லை. இந்நிலையில் வாலு படம் டிசம்பர் 24ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதிப்பிரச்சினை

நிதிப்பிரச்சினை

படத்திற்கு ஏற்பட்ட நிதிப் பிரச்னை தீர்வடைந்ததைத் தொடர்ந்து தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறதாம். இதனால் எப்படியும் இந்த முறை படத்தை கண்டிப்பாக குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் செய்துவிடுவார்கள் எனத் தெரிகிறது.

நானும் காத்திருக்கிறேன்

நானும் காத்திருக்கிறேன்

இந்நிலையில் தனது படங்கள் எப்போது வெளியாகும் என்பது குறித்து சிம்பு கூறியிருப்பது,"'வாலு', 'வேட்டை மன்னன்' ஆகிய படங்களுக்கு ஒரே தயாரிப்பாளர். பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு 'வாலு' திரைப்படம் வெளியாக உள்ளது. ஒரு நடிகராக நான் எனது கடமையை முடித்து விட்டேன். என்னுடைய ரசிகர்களைப் போலவே நானும் எனது படம் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கிறேன் என்று கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தார்.

நன்றி ரசிகர்களே

நன்றி ரசிகர்களே

தற்போது வாலு படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டதை அடுத்து சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில்,உங்களது ஒவ்வொரு பதிவையும் பார்த்து வருகிறேன், கண் கலங்க வச்சிட்டீங்க. நன்றி நண்பர்களே என்று குறிப்பிட்டுள்ளார்.

2 ஆண்டுகளுக்குப் பின்

2 ஆண்டுகளுக்குப் பின்

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் போடா போடி. கடந்த 2012ம் ஆண்டு வந்த இந்தப் படத்தோடு சரி, அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக எந்தப் படமும் வெளியாகவில்லை. இடையில் அவர் கௌரவ வேடத்தில் நடித்த படங்கள் மட்டுமே வெளியாகி ரசிகர்களை ஆறுதல் படுத்தின.

இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

தற்போது நயன்தாரா உடன் இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். வாலு ரிலீஸ் ஆவதன் மூலம் 2 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சிம்புவை மீண்டும் ஹீரோவாக திரையில் பார்க்கும் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

படம் ரிலீஸ் ஆவதெல்லாம் சரிதான். ஆனால் ஹன்சிகா உடன் உடைந்த காதல் ஒட்டுமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X