»   »  செய்வீர்களா..... செஞ்சுருவேன்.. கலகலக்கும் "மாரி" கலாட்டா.. வாட்ஸ் ஆப்பில்!

செய்வீர்களா..... செஞ்சுருவேன்.. கலகலக்கும் "மாரி" கலாட்டா.. வாட்ஸ் ஆப்பில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் - காஜல் அகர்வால் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் மாரி படத்தின்" செஞ்சிருவேன்" என்று தனுஷ் சொல்லும், வசனத்தை வைத்து சிம்பு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர் நெட்டில்.

ஒருவழியாக வரும் ஜூலை 17 ம் தேதி மாரி படத்துடன் போட்டி போடும் நோக்கில் வெளியாகிறது வாலு திரைப்படம். கண்டிப்பாக வெளியாகும் என்று சூடம் ஏற்றாத குறையாக டி.ராஜேந்தர் சொல்லி இருக்கிறார்.

Vaalu Vs Maari – Whatsapp Comedy

இந்த நிலையில் யாரோ ஒரு புண்ணியவான் வாலு படத்தை மரண ஓட்டு ஓட்டித் தள்ள, தற்போது வாட்ஸ் ஆப்பில் வலம் வந்துகொண்டிருக்கிறது அந்த டயலாக். அது என்னவென்று கேட்கிறீர்களா மாரி படத்தில் தனுஷ் என்ன கேட்டாலும் செஞ்சிருவேன் என்று சொல்கிறார் அல்லவா, அந்த வசனத்தையும் வாலுவையும் மிக்ஸ் பண்ணி சொல்லி இருப்பதைக் கொஞ்சம் படியுங்கள்.

முதலில் புரட்சித் தலைவி "அம்மா" கேட்கிறார் செய்வீர்களா? தனுஷின் பதில் செஞ்சிருவேன். அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் தனுஷிடம் யோகா செய்வீர்களா? என்று கேட்க அதற்கு தனுஷ் செஞ்சிருவேன் என்று கூறுகிறார்.

அடுத்து நடிகர் சிம்பு தனுஷிடம் என்ன சொன்னாலும் செஞ்சிருவியா? என்று கேட்க, தனுஷும் சளைக்காமல் செஞ்சிருவேன் என்று கூறுகிறார். சிம்பு ஒரு கேள்வியை தனுஷைப் பார்த்துக் கேட்க அதற்கு தனுஷ் பதில் சொல்ல முடியாமல் வாயடைத்துப் போய்விடுகிறார்.

அப்படி என்ன சிம்பு கேட்டார் சொல்லவா வேறு ஒன்றுமில்லை வாலு படம் வெளியானதும் மாரி படத்தை ரிலீஸ் செய், என்று சிம்பு கூற இப்போது தெரிகிறதா தனுஷ் ஏன் வாயடைத்துப் போனார் என்று.

English summary
Simbu's Vaalu Release Date And Dhanush's Maari Dialogue, Netizens Created Some Comedy Dialogue's In Whatsapp.
Please Wait while comments are loading...