மணிரத்னம் டச்.. வாழ்வியல் அழகு.. நிச்சயமாக இந்த வானம் கொட்டட்டும்!
சென்னை: விக்ரம் பிரபுவின் வானம் கொட்டட்டும் படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
மணிரத்னம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தனா இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, சரத்குமார், ராதிகா, மடோனா சபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வானம் கொட்டட்டும்
தற்போது வெளியாகியுள்ள வானம் கொட்டட்டும் டீசர் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று டிரெண்டாகி வருகிறது.
தனுஷ் ரிலீஸ்
மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அண்ணன் தங்கை பாசம்
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் நாயகன் விக்ரம் பிரபுவுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தலாக நடித்துள்ளார். டீசரில் வரும் அண்ணன் தங்கை பாசம் ரியாலிட்டியாக இருக்கிறது.

சீர்காழி கோவிந்தராஜன்
சீர்காழி கோவிந்தராஜனின் லேட்டஸ்ட் வெர்ஷன் என அழைக்கப்படும் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக இந்த படத்தில் அறிமுகமாகியுள்ளார். டீசரில் அவர் கொடுத்திருக்கும் பின்னணி இசை அவரது குரல் போலவே இனிமையாக இருக்கிறது.

மாஸ்டர் நடிகர்
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து வரும் சாந்தனு, வானம் கொட்டட்டும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு முன்னாடியே சாந்தனுவின் அபாரமான நடிப்பை இந்த படத்தில் ரசிகர்கள் காணலாம்.
மணி சார் டச்
வானம் கொட்டட்டும் படத்தின் கதையாசிரியர் இயக்குநர் மணிரத்னம் தான். அதனால், தான் படத்தின் மேக்கிங்கில் கூட அவரது டச் இருக்கிறது.
டீசர் எப்படி இருக்கு?
அம்மா ராதிகாவுடன் வளரும் விக்ரம் பிரபு மற்றும் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்க்கை குறும்புத்தனமாகவும், காதல் பகுதி என ரொமாண்டிக்காகவும் நகர்கிறது. மாமாவாக பாலாஜி சக்திவேல் நடித்துள்ளார். ஏதோ ஒரு காரணத்திற்காக கொலை செய்து விட்டு, ஜெயிலில் இருக்கும் சரத்குமார் திரும்ப தனது குடும்பத்தை பார்க்க வர, அதன் பின் நடக்கும் பிரச்சனைகளும், சொந்தங்கள் இணைவதும் என டீசர் அழகிய வாழ்வியலாக இருக்கிறது.

கம்பேக்
விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான பல படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் அவருக்கு நல்ல கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications