வானம் தோன்றாதோ… கொரோனா விழிப்புணர்வு பாடல்… இணையத்தில் டிரெண்டிங்!

சென்னை : தெலுங்கு நடிகர் நானி நடித்துள்ள கொரோனா விழிப்புணர்வு பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

மதன் கார்க்கியின் பாடல் வரிகளில் மிகவும் உணர்வுப்பூர்வமாக உருவான இந்த பாடலுக்கு விஜய் புல்கனின் இசையமைத்துள்ளார்.

இணையத்தில் வெளியாகி உள்ள இந்த பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.

8,183 பேர் பாதிப்பு

8,183 பேர் பாதிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 180 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 29வது நாளாக குறைந்துள்ளது. தினசரி பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

தாக்கம் குறைந்தது

கொரோனா பரவல் குறைந்த மாவட்டங்களில் முதற்கட்டமாக நகரப் பேருந்துகளை இயக்க அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானாவில் கொரோனாவின் 2வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து அம்மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வானம் தோன்றாதோ

வானம் தோன்றாதோ

இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வானம் தோன்றாதோ என தொடங்கும் அந்த பாடலின் மருத்துவர்களின் உணர்வை அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தன் குடும்பத்தை மறந்து மருத்துவர்கள் மக்களுக்காக எத்தனை இன்னல்களை சந்திக்கிறார்கள் என்பதை இந்த பாடல் விளக்குகிறது.

டிரெண்டிங்கில்

டிரெண்டிங்கில்

இந்த ஆல்பம் பாடலில் சத்யதேவ் மற்றும் ரூபா, நானி ஆகியோர் நடித்துள்ளனர். இப்பாடலுககு விஜய் புல்கனி இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி இப்பாடலை எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த விழிப்புணர்வு பாடல் வெளியாகி சமூகவலைத்தள பக்கத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

More from Filmibeat

Read more about: nani நானி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X