விஜய்தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்கிறாரா வாணி போஜன்?

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வரும் வாணி போஜன் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐதராபாத்: சின்னத்திரை நயன்தாரா என செல்லமாக அழைக்கப்படும் வாணி போஜன், ப்ரியா பவானி சங்கரை போலவே வெள்ளித்திரையில் கால்பதிக்க உள்ளார்.

அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய் சேதுபதி நடித்துள்ள ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் வாணி போஜன்.

Vaani Bhojan joined with vijay deverakonda, picture goes viral

இந்நிலையில், தென்னிந்திய பெண்களின் கனவு கண்ணனாக திகழும் விஜய்தேவரகொண்டாவுடன் வாணி போஜன் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் இரண்டாம் நாயகியாக அறிமுகமாகும் வாணி போஜன், தெலுங்கில் விஜய் தேவரகொண்டவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாரா என்ற செய்திகளும் பரவி வருகின்றன.

ஆனால், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரித்துள்ள மீக்கு மாத்திரமே செப்தா படத்தில் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் என்பதால், அந்த படத்தில் நடித்துள்ள வாணி போஜன், விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து எடுத்துள்ள படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறதாம்.

இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில், தற்போது தமிழில் வாணி போஜன் அறிமுகமாகும் ஓ மை கடவுளே படத்தின் டிரைலரும் வெளியாகி உள்ளது.

விரைவில் சின்னத்திரையை போலவே வெள்ளித்திரையிலும் தனக்கான ஒரு இடத்தை வாணி போஜன் பிடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X